புதுக்கோட்டை: திமுகவுக்கு ஆதரவாய் களமிறங்கும் திருநாவுக்கரசர்!

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை தொகுதி கிடைக்காததால் கடும் அதிருப்தியில் உள்ள மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், அங்குதிமுக சார்பில் போட்டியிடும் ரகுபதியின் வெற்றிக்காக கடுமையாக உழைக்குமாறு தனது ஆதரவாளர்களுக்குஉத்தரவிட்டு களம் இறக்கியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் செல்லப் பிள்ளையான திருநாவுக்கரசர், மாவட்டத்தில் எந்தத் தொகுதியில்போட்டியிட்டாலும் வெற்றி பெறக் கூடிய அளவுக்கு செல்வாக்கு படைத்தவர்.

அறந்தாங்கி சட்டசபைத் தொகுதியில் தொடர்ந்து பலமுறை வென்றுள்ளார். எம்.ஜி.ஆர். இருந்தபோது இரட்டைஇலை, ஜெயலலிதாவுடன் சேவல் சின்னம், திமுக கூட்டணி உதவியுடன், பின்னர் தனியாகவே என அனைத்துமுறையும் வென்று காட்டியவர்.

முதல் முறையாக புதுக்கோட்டை எம்.பி. தொகுதியிலும் போட்டியிட்டு அதிலும் வெற்றி பெற்றார். அதன் பிறகுதனது கட்சியை பாஜகவுடன் இணைத்து மத்திய அமைச்சரும் ஆனார். பதவி எதிலும் இல்லாதபோது கூடஅறந்தாங்கியில் இருந்து உதவி கேட்டு யார் வந்தாலும் அவர்களுக்கு சோறு போட்டு, கைச் செலவுக்கு காசுகொடுத்து அனுப்புபவர் திருநாவு.

மத்திய அமைச்சரான பின் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் தன்னைச் சந்திக்க சென்னைக்கோ,டெல்லிக்கோ வந்தால் மரியாதையாக நடத்தி அவர்களுக்கு வேண்டியதைச் செய்து வந்திருக்கிறார்.

இந் நிலையில் திருநாவுக்கரசரின் மேல் இருக்கும் முன் பகை காரணமாக புதுக்கோட்டையை பாஜகவுக்கு ஒதுக்கமுடியாது என்று மறுத்த முதல்வர் ஜெயலலிதா, திருநாவுக்கரசரை வேறு எந்தத் தொகுதியிலும் நிறுத்தக் கூடாதுஎன்றும் தடை போட அனைத்துக்கும் பா.ஜ.க. தலைமை தலையாட்டியது.

இதனால் சீட் கிடைக்காத நிலைக்குத் தள்ளப்பட்டார் திருநாவுக்கரசர். இதை அவர் ஜீரணித்துக் கொண்டாலும்அவரது ஆதரவாளர்கள் மன்னிக்கத் தயாராக இல்லை.

சீட் கிடைக்காவிட்டாலும் கூட அதிமுகவுக்கு தனது வாழ்த்துக்களைக் கூறி தனது பெருந்தன்மையைவெளிப்படுத்தினார் திருநாவுக்கரசர். இருப்பினும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்கள்அவரைச் சந்தித்து கண்கலங்க அவரும் சேர்ந்து உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்.

முதலில் அவர்களை அமைதிப்படுத் திருநாவுக்கரசர் முயன்றார். ஆனால், அவர்கள் ஜெயலலிதாவுக்கு பாடம்புகட்ட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்த அவர்களது வேகத்தைப் பார்த்த அரசரும் அதிமுகவைத்தோற்கடிப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.,

இதற்கான வேலையையும் அவர் தொடங்கி விட்டார்.

திமுக சார்பில் போட்டியிடும் ரகுபதி அதிமுகவில் இருந்தபோது திருநாவுக்கரசரின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்தான். இதையடுத்து திருநாவுக்கரசரை தொடர்பு கொண்ட ரகுபதி பேச, முழு உதவி செய்வதாகஉறுதியளித்திருக்கிறார் திருநாவு.

இதையடுத்து ரகுபதியின் வெற்றியை உறுதி செய்யுமாறு தனது ஆதரவாளர்களுக்கு அரசர் உத்தரவுபிறப்பித்துள்ளார். தனது ஆதரவாளர்களை முழு அளவில் களத்தில் இறங்கி விட்டுள்ளார்.

மேலும், அதிமுகவுக்காக வாக்கு கேட்டு புதுக்கோட்டை பக்கம் போக மாட்டேன் என்றும் பா.ஜ.க. தலைமையிடம்திட்டவட்டமாக அரசர் கூறிவிட்டார். பாண்டிச்சேரி தொகுதி பா.ஜ.க. பொறுப்பாளர் என்ற நியமனத்தை வாங்கிக்கொண்டு அங்கு போய் டேரா போட்டிருருக்கிறார் திருநாவுக்கரசர்.

புதுக்கோட்டையில் நிறுத்தப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரனுக்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லை.இருந்தாலும், முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர் என்ற ஒரே ஒரு பலம் மட்டுமே உள்ளது.

ரகுபதியின் பலவீனம் அவர் நாட்டுக்கோட்டை செட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர் என்பது மட்டுமே. இந்தசமூகத்தினர் இங்கு மைனாரிட்டி தான்.

மற்றபடி திமுக இங்கு நல்ல செல்வாக்குடன் தான் உள்ளது. திருநாவுக்கரசருக்கு விழாத ஓட்டுக்களை திமுகதான்வாங்கி வந்துள்ளது. இம்முறை அவரது ஆதரவும் இருப்பதால் திமுகவின் ரகுபதி படு தெம்புடன் தொகுதியில் சுற்றிவருகிறார்.

அரசரின் சொந்த ஊரான அறந்தாங்கியில் மட்டும் திருநாவுக்கரசரின் சமூகமான முக்குலத்தோர் வாக்குகள் 1லட்சம் உள்ளன. இது தவிர புதுக்கோட்டையின் பல பகுதிகளிலும் முஸ்லீம்களும் பெரும் எண்ணிக்கையில்உள்ளனர். இந்த வாக்குகள் திமுகவுக்கு கிடைக்கும் என்று ரகுபதி எதிர்பார்க்கிறார்.

தியேட்டர்கள் அதிபர், சினிமா வினியோகஸ்தர் என பணத்துக்கும் ரகுபதியிடம் பஞ்சமில்லை. இதனால் திமுகதொண்டர்கள் தவிர திருநாவுக்கரசரின் தொண்டர்களையும் கவனித்து வருகிறார்.

திருநாவுக்கரசரைத் திட்டினால் தலைமையிடம் நல்ல பெயர் கிடைக்கும் என்று அதிமுகவினர் அவரை வாய்க்குவந்தபடி திட்டி பிரச்சாரம் செய்ய, கடுப்பான பா.ஜ.கவினர் வேட்பாளர் ரவிச்சந்திரனுக்கு பிரசாரம் செய்யமாட்டோம் என்று விலகிக் கொண்டுவிட்டனர்.

தனது வீண் பிடிவாதத்தால் திமுகவுக்கு இந்தத் தொகுதியில் வெற்றியை ஜெயலலிதாவே ரிசர்வ் செய்துதந்துவிட்டார் என்கின்றனர் திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள்.

என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கிப் போயுள்ளார் ரவிச்சந்திரன். அம்மா இந்தத் தொகுதியில் ஒருரவுண்ட் செய்யப் போகும் பிரசாரத்தை மட்டுமே நம்பி நிற்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+