சர்வாதிகாரி ராமதாஸ்: பு.தா.இளங்கோவன் கடும் தாக்கு
ஓசூர்:
டாக்டர் ராமதாஸ் ஒரு சர்வாதிகாரி. அவரது குணத்தால் பா.ம.க. விரைவிலேயே அழிந்து விடும் என்று பா.ம.கவில்சீட் மறுக்கப்பட்டு பா.ஜ.கவால் தர்மபுரி சீட் கொடுக்கப்பட்டுள்ள பு.தா.இளங்கோவன் பகிரங்கமாகவிமர்சித்துள்ளார்.
பா.ம.கவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவர் பு.தா.இளங்கோவன். டாக்டர் ராமதாஸ் வன்னியர் சங்கத்தை ஆரம்பித்தபோதிலிருந்து அவருடன் இருந்து வந்தவர் பு.தா.இளங்கோவன்.
வன்னியர் சங்கம், அரசியல் கட்சியாக உருவெடுத்த பின்னர் அதை வட மாவட்டங்களில் குறிப்பாக தர்மபுரியில்செல்வாக்கு மிக்க கட்சியாக வளர்த்ததில் பு.தா. இளங்கோவனுக்கு முக்கியப் பங்கு உண்டு.
ஆனால் பு.தா. இளங்கோவனுக்கு இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கொடுக்கப்படவில்லை. ராமதாஸின்மகன் டாக்டர் அன்புமணியின் நண்பரான டாக்டர் செந்தில் என்பவருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால்கடும் ஆத்திரமடைந்தார் பு.தா. இளங்கோவன்.
இந் நிலையில் அவரது அதிருப்தியைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த பா.ஜ.க. அவருக்குதர்மபுரியைக் கொடுப்பதாகக் கூறியது. இதை ஏற்ற பு.தா.இளங்கோவன் தற்போது பா.ம.கவிலிருந்து விலகிபா.ஜ.க.வுக்கு வந்து விட்டார்.
ஓசூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், டாக்டர் ராமதாஸ் சர்வாதிகார மனப்பான்மை கொண்டவர்.நேரத்திற்கு நேரம் தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தி.
பா.ம.கவுக்காகப் பாடுபடும் உண்மையான தொண்டர்களை மறந்து விட்டு தன்னைச் சுற்றி ஜால்ராஅடிப்பவர்களையும், குடும்ப உறுப்பினர்களையும் மட்டும்தான் அவர் ஆதரிப்பார்.
17 வயதில் உழைப்பாளர் பொது நலன் கட்சி என்ற கட்சியில் இணைந்து சிதம்பரத்தில் எனது அரசியல்வாழ்க்கையைத் தொடங்கினேன். வன்னியர் சங்கம் உருவாக்கப்பட்டபோது, நானும், எனது சகோதரர்பு.தா.அருள்மொழியும் சேர்ந்து கடுமையாக உழைத்து வன்னியர் சங்கத்தை பலம் மிக்க அமைப்பாக மாற்றினோம்.இதையெல்லாம் ராமதாஸ் மறந்து விட்டார்.
ராமதாஸின் சுய நலப் புத்தி காரணமாக பா.ம.க. விரைவிலேயே அழிந்து விடும். அதற்கு எதிர்காலம் கிடையாது.தர்மபுரி பா.ம.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் செந்தில், பா.ம.கவில் அடிப்படை உறுப்பினர் கூடகிடையாது. அன்புமணிக்கு நண்பர் என்ற ஒரே காரணத்தால்தான் அவருக்கு சீட் கொடுத்துள்ளார்கள்.
எனது நான்காண்டு கால எம்.பி. பதவிக்காலத்தின்போது நான் செயல்பட்ட விதத்தைப் பாராட்டி தர்மபுரி சீட்டைஎனக்குப் பரிசாகக் கொடுத்துள்ளது பா.ஜ.க. ஒரு லட்சத்திற்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் பா.ம.கவைதோற்கடித்து வெற்றி பெறுவேன் என்றார் பு.தா.இளங்கோவன். அதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்ககிருஷ்ணகிரிக்குப் புறப்பட்டுச் சென்றார் பு.தா.இளங்கோவன்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications