25 தொகுதிகளில் மக்கள் கூட்டணி போட்டி
சென்னை:
தலித் கட்சிகள், மக்கள் தமிழ் தேசம், இந்திய தேசிய லீக் ஆகியவை இணைந்த மக்கள் கூட்டணி நாடாளுமன்றத்தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது.
தலித் கட்சிகளான புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மக்கள் தமிழ் தேசம், இந்திய தேசிய லீக் ஆகியகட்சிகள் இணைந்து மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதிய அணியை உருவாக்கியுள்ளன. இந்த அணியில்இணையும் என்று கூறப்பட்ட புதிய நீதிக் கட்சி இப்போது தனித்துப் போட்டியிடப் போவதாகக் கூறி விட்டது.
இந் நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமி, தொல்.திருமாவளவன், எஸ்.கண்ணப்பன் ஆகியோர் சென்னையில்செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது 25 தொகுதிகளில் தங்களது கூட்டணி போட்டியிடவுள்ளதாக அவர்கள்தெரிவித்தனர்.
இதன்படி, விடுதலைச் சிறுத்தைகள் 8 தொகுதிகள் (சிதம்பரம், மதுரை, மயிலாடுதுறை, பெரம்பலூர், தர்மபுரி,ஸ்ரீபெரும்புதூர், ராசிபுரம், பாண்டிச்சேரி), புதிய தமிழகம் 5 தொகுதிகள் (தென்காசி, திருநெல்வேலி, சிவகாசி,பெரியகுளம், பொள்ளாச்சி), இந்திய தேசிய லீக் 3 (புதுக்கோட்டை, கடலூர், திருப்பத்தூர்) தொகுதிகளில்போட்டியிடவுள்ளன. இக்கூட்டணி உருவாகக் காரணமான ஐக்கிய ஜனதாதளம் பழனி, திண்டுக்கல், திருச்சி ஆகியதொகுதிகளில் போட்டியிடுகிறது.
புரட்சி கவுன்சில் என்ற குட்டிக் கட்சியும் இந்தக் கூட்டணியில் இணைந்து நாகை தொகுதியில் போட்டியிடுகிறது.மக்கள் தமிழ் தேசம் 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இருப்பினும் தொகுதிகளின் பெயர்கள்அறிவிக்கப்படவில்லை.
தலைவர்களைப் பொருத்தவரை எஸ்.கண்ணப்பன் ராமநாதபுரத்திலும், டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசியிலும்போட்டியிடுகிறார்கள். திருமாவளவன் சிதம்பரம் மற்றும் இன்னொரு தொகுதி என 2 தொகுதிகளில்போட்டியிடவுள்ளார். அனைவரும் ஐக்கிய ஜனதா தளத்தின் அம்பு சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.
-
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications