ஜெ. பிரச்சாரத்தை வீடியோ படம் எடுக்க வாசன் கோரிக்கை
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சாரங்களின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக மீறப்படுகின்றன.எனவே அவரது பிரச்சாரத்தை வீடியோ படம் எடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சாரத்தில் தேர்தல்நடத்தை விதிமுறைகள் கடுமையாக மீறப்படுவதாக புகார்கள் வருகின்றன.
இலவச மின்சாரத்தை ரத்து செய்து விட்டு, ஜெயலலிதாவின் பிரச்சாரங்களின்போது மின்சாரம் அதிக அளவுக்குமுறைகேடாக பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் கூறுகிறார்கள். எனவே ஜெயலலிதாவின் பிரச்சாரங்களைவீடியோ படம் எடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறாமல் தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும்.நடத்தை விதிமுறைகளை காற்றில் பறக்க விடும் ஜெயலலிதாவை தேர்தல் ஆணையம் தீவிரமாகக் கண்காணிக்கவேண்டும்.
மாநில அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இடைக்கால வறட்சி நிவாரண நிதியை வழங்கியுள்ளது. இந்தநிதி போதுமானதாக இல்லை. இருப்பினும் இந்த நிவாரணப் பணிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தவேளையில் வெளிப்படையாக செய்யப்பட வேண்டும். நிவாரணப் பணிகள் எந்தவித குறுக்கீடும் இல்லாமல்விரைவாக மக்களைச் சென்றடைய வேண்டும்.
பிளஸ்டூ தேர்வுகள் நடைபெறுவதால் காங்கிரஸ் தொண்டர்கள் ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்தி பிரச்சாரம்செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார் அவர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications