டிவி நிகழ்ச்சியில் பாதியில் வெளியேறிய வலம்புரி ஜான்
சென்னை:
விஜய் டிவியில் ஏற்பாடு செய்திருந்த விவாத நிகழ்ச்சியில் காங்கிரஸ் பிரமுகருடன் ஏற்பட்ட மோதலில் வலம்புரிஜான் பாதியிலேயே வெளியேறினார்.
விஜய் டிவியில் மக்கள் யார் பக்கம் என்ற தலைப்பில் அரசியல் பிரமுகர்களுடன் விவாத நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.நேற்றிரவு இந்த நிகழ்ச்சிக்கு பத்திரிக்கையாளர் ஞானி தலைமை வகித்தார். இதில் திமுகவிலிருந்து விலகிய ஆலடிஅருணா, முன்பே அக் கட்சியிலிருந்து விலகிய வலம்புரி ஜான், காங்கிரஸ் துணைத் தலைவர் கேெளரி சங்கர்ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆலடி அருணா திமுகவை கடுமையாக விமர்சித்தார். அப்போது குறுக்கிட்ட ஞானி, நீங்கள் திமுகவில்இருந்தபோது இந்தத் தவறுகள் தெரியவில்லையா என்று கேட்டார். அதற்கு அருணா மழுப்பலாக பதில் கூறினார்.ஆனாலும், கோபப்படாமல் நிதானமாகப் பேசினார்.
அடுத்த பேசிய வலம்புரி ஜான், திமுக துணை பொதுச் செயலாளர் ஸ்டாலினுக்கு அனுபவம் இல்லை. நான்இன்னும் திமுக இலக்கிய அணியில் இருந்தாலும் செயல்படாமல் இருக்கிறேன் என்று கூறினார். அப்போதுகுறுக்கிட்டு ஞானி கேள்வி கேட்க முனைத்தார்.
அதற்கு வலம்புரி ஜான், இனியொரு முறை குறுக்கிட்டால் எழுந்து போய் விடுவேன் என்று மிரட்டும் தொனியில்கூறினார்.
பிறகு கெளரி சங்கர் பேசுகையில், வலம்புரி ஜான் தாவாத கட்சியே இல்லை. இன்று அவர் எந்தக் கட்சியில்இருக்கிறார் என்பதை ஒவ்வொரு நாளும் மக்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள் என்றார்.
இதனால் கடுப்பாகிப் போன வலம்புரி ஜான் எழுந்து போய் விட்டார். கெளரி சங்கரின் பேச்சுக்குப்பின்விளம்பரம் போடப்பட்டது. விளம்பரத்துக்குப் பிறகு பார்க்கும்போது, வலம்புரி ஜான் அங்கு இல்லை. அவர்போய்விட்டதாக ஞானி கூறினார். அவர் இல்லாமல் விவாதம் தொடர்ந்து நடந்தது.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications