மக்களிடமும் திட்டு.. ஜெவிடமும் திட்டு... நொந்து நூலான பொன்னையன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருச்செங்கோடு அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டபிரச்சாரத்துக்கு வந்த அமைச்சர் பொன்னையனை பொது மக்கள் சுற்றி நின்று கடுமையான வார்த்தைகளால் திட்டிவிரட்டி விட்டனர்.

இந்த மக்களவைத் தொகுதியில் அடங்கிய சட்டமன்றத் தொகுதியில் நின்று வென்று அமைச்சரான பொன்னையன்தொகுதியைக் கண்டு கொண்டதே இல்லை. மேலும் ரத்தத்தின் ரத்தங்களையும் மதிப்பது இல்லை.

இதனால் அதிமுக ஊழியர் கூட்டம் நடந்தபோதே, அதில் பேசிய பல அதிமுகவினரும், இந்தத் தொகுதியில் நாம்வெல்ல வேண்டுமென்றால் ஒரே ஒரு புண்ணியத்தை மட்டும் பொன்னையன் செய்ய வேண்டும். தொகுதிப் பக்கம்எக்காரணம் கொண்டும் வந்துவிடக் கூடாது. அவரைப் பார்த்தாலே நிச்சயமாக அதிமுகவுக்கு மக்கள் ஓட்டு போடமாட்டார்கள் என்றனர்.

இந் நிலையில் திமுக சார்பில் பவர்புல்லான சுப்புலட்சுமி ஜெகதீசன் நிற்பதால், அதைச் சமாளிக்க பொன்னையனிடம்தான் திருச்செங்கோடு தொகுதி பொறுப்பை ஜெயலலிதா ஒப்படைத்தார்.

நேற்று ஜெயலலிதா மேடைக்கு வருவதற்கு சற்று முன்பாக ஏற்பாடுகளைக் கண்காணிக்க திருச்செங்கோட்டுக்குவந்தார் பொன்னையன். மேடை அருகே வந்த அவரைப் பார்த்தவுடன் மக்கள் மத்தியில் ஆவேசம் கிளம்பியது.

அவரைச் சுற்றி வளைத்து, ஒருமையில் அழைத்து, கண்டபடி மக்கள் திட்ட ஆரம்பித்தனர். முதலில் சிரித்துசமாளித்த பொன்னையன் மக்களின் தீவிரத்தைக் கண்டு முகம் இருண்டார்.

மக்கள் திட்டுவதை, அவர் மீது கடுப்பில் இருக்கும் அதிமுகவினர் எட்ட நின்று ரசித்துக் கொண்டிருந்தனர். போலீசார்இடையில் தலையிட்டு மக்களை விரட்ட, பதிலுக்கு அவர்களை விரட்டினார் பொன்னையன்.

அம்மா வர்ற நேரத்துல ஏன்யா இப்படி மக்களை விரட்றீங்க (ஏற்கனவே கூட்டம் கூட்டும் பிரச்சனை வேறு) என்றுபோலீசாரை விரட்டிவிட்டு விட்டு தானே மக்களிடம் சமாதானம் பேசினார்.

ஆனால், ஆத்திரம் குறையாத மக்கள் பொன்னையனை பிலு பிலுவென பிடித்து திட்டித் தீர்த்துவிட்டனர். இதனால்முகம் தொங்கிப் போய் அங்கிருந்து வெளியேறினார். போகும்போதும் கூட அவரை மக்கள் தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தனர்.

தொகுதிக்கு எதையும் செய்யாத பொன்னையன் திரும்பி ஓடு, நீ இருந்தால் அதிமுக ஜெயிக்காது என மக்கள் சாபம்இட நொந்து போய் மேடைக்குப் பின் பக்கமாய் போய் ஒதுங்கினார் பொன்னையன்.

இதைத் தொடர்ந்து மேடைக்கு வந்த ஜெயலலிதாவுக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட அவர் அப்செட் ஆனார்.மக்களின் பல்ஸை உணர்ந்த அவர் பொன்னையனை தனியே அழைத்து தன் பங்குக்கு டோஸ் விட நொந்துநூலாகி, பஞ்சு பஞ்சாகி தனது காரில் ஏறி உட்கார்ந்தார் பொன்னையன்.

இதற்கிடையே பொன்னையனை நினைவுபடுத்தியே திமுகவின் உடன் பிறப்புக்கள் வீடு, வீடாக பிரச்சாரம் செய்துவருகின்றனர். இதனால் அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் பொன்னையன் மீது செம கடுப்பில்இருக்கிறார்.

கடந்த முறை ஆட்சியில் இருந்த ஜெயலலிதா, திமுக வேட்பாளரான சுப்புலட்சுமி ஜெகதீசனை புலிகள் விவகாரத்தில்கைது செய்து 9 மாதம் சிறையில் அடைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் பிரச்சாரத்தில் வெறியுடன் இறங்கியிருக்கும் சுப்புலட்சுமி, தனது உட்கட்சி எதிரியான திமுக மாவட்டச்செயலாளர் என்.கே.கே. பெரியசாமியை வீடு தேடிப் போய் சந்தித்து, சமாதானம் செய்துவிட்டார்.

இதையடுத்து பழசை மறந்துவிட்ட பெரியசாமி, உன்னை நான் ஜெயிக்க வைக்கிறேம்மா என்று தைரியம் சொல்லி,தனது முழு படை பலத்தையும் திருச்செங்கோட்டுக்குள் இறக்கி விட்டிருக்கிறார். சுப்புலட்சுமி தனது சொத்து,பத்துக்களைக் கூட கரைத்து பணத்தையும் வாறி இறைப்பதால் உடன்பிறப்புக்கள் உற்சாகமாக களத்தில் சுற்றிக்கொண்டிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+