மதுரை: ஒரே தண்டவாளத்தில் எதிரெதிர் திசையில்... மாபெரும் விபத்திலிருந்து தப்பிய ரயில்கள்
மதுரை:
மதுரை திருப்பரங்குன்றத்தில் 2 பயணிகள் ரயில்கள் மாபெரும் விபத்திலிருந்து தப்பின.
மதுரையிலிருந்து கொல்லம் செல்லும் ரயில் இரவு 11 மணியளவில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தைநெருங்கிக் கொண்டிருந்தது. எதிர் திசையில் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை சென்ற ரயில் வந்துகொண்டிருந்தது.
மின்னணு சிக்னலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இரு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிர் திசையில்வந்து கொண்டிருந்தன. திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தை ரயில்கள் நெருங்கியபோது இரு டிரைவர்களும்நிலைமையை உணர்ந்தனர்.
அவசர கதியில் செயல்பட்ட இரு ரயில்களின் டிரைவர்களும் எமர்ஜென்சி பிரேக் போட்டு ரயில்களை நிறுத்தினர்.
சுமார் 20 அடி தூரம் நெருங்கிவிட்ட இரு ரயில்களும் நேருக்கு நேர் வந்து நின்றன.
டிரைவர்களின் சமயோசிதத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நள்ளிரவில் நடந்த இந்த பயங்கரசம்பவத்தால் பயணிகள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். சுமார் இரண்டரை மணி நேர தாமதத்திற்குப் பிறகு இருரயில்களும் புறப்பட்டுச் சென்றன.
-
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா











Click it and Unblock the Notifications