ராகு காலம் பார்க்கும் திராவிட "தலை"கள்!
திருச்சி:
நாத்திகம் பேசும் திராவிட தலைவர்களில் பலர் ராகு காலம் பார்த்த பிறகே தங்களது தேர்தல் தொடர்பானபணிகளை பார்க்கின்றனர்.
பெரியாரின் தொண்டர்கள், திராவிட இயக்க தீவிரவாதிகள் என்றெல்லாம் கூறிக் கொள்ளும் பலர் ரகசியமாககடவுள் நம்பிக்கையில் தீவிரமாக இருப்பார்கள். சிலர் வீட்டில் இருக்கும்போது பக்திப் பழமாக இருப்பார்கள்.ஆனால் கூட்ட மேடைக்கு வரும்போது கருப்புத் துண்டு, பொட்டு அழிக்கப்பட்ட நெற்றி என சுத்த நாத்திகராகவந்து சேருவார்கள்.
சமீபத்தில் நடிகர் சந்திரசேகர் திமுக தேர்தல் பிரச்சார பயணத்தில் கலந்து கொள்வதற்காக வந்தபோது, தான்தங்கியிருந்த ஹோட்டலில் நெற்றியில் விபூதியும், சந்தனமும் வைத்துக் கொண்டு வேட்டி, சட்டையில் பக்தி மணம்கமழக் காணப்பட்டார். விழா மேடைக்கு வந்தபோது கருப்புத் துண்டு, பேண்ட், சட்டை, பாழ் நெற்றி எனதிராவிடப் பிள்ளையாக மாறியிருந்தார்.
இதேபோல, சமீபத்தில் திருச்சியில் நடந்த மதிமுக செய்தியாளர்கள் கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கே.என்.நேருவும், வேட்பாளர் எல்.கணேசனும் ராகு காலம் பார்த்தே தங்களது பேட்டியைத் தொடங்கினர்.
பேட்டிக்காக செய்தியாளர்கள் வந்து காத்திருந்தும் கூட நேரு வந்தபாடில்லை. விசாரித்தபோது, ராகுகாலம்நடப்பதால் அது முடிந்த பிறகு வந்து விடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல, ராகு காலம் முடிந்த பிறகேசெய்தியாளர்களைச் சந்திக்க வந்தார் நேரு.
எல்.கணேசனும், நேரு வரும் வரையிலும் அதாவது ராகு காலம் முடியும் வரையிலும் வாய் திறப்பதில்லை என்றுஉறுதியாக இருந்தார். பேட்டியை ஆரம்பியுங்களேன் என்று நிருபர்கள் கேட்டபோதும், நேரு வந்துடட்டுமே என்றுமட்டுமே திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்.
வாழ்க திராவிடம்! வளர்க நாத்திகம்!!
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications