திருமாவளவன் மாநாட்டில் பெர்னாண்டஸ் இன்று பங்கேற்பு
சேலம்:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சேலத்தில் இன்று நடைபெறும் இந்துத்வா எதிர்ப்பு மாநாட்டில் மத்தியபாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கலந்து கொள்கிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சேலத்தில் இந்துத்வா எதிர்ப்பு மாநாடு இன்று நடக்கிறது. இதற்காக போஸ்மைதானத்தில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வித்தியாசமான வடிவமைப்பில் மேடையும்ரெடியாகி உள்ளது.
இந்த மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கலந்து கொள்ளவுள்ளார். அவருடன்,மத்திய இணை அமைச்சர் திக் விஜய் சிங், கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் சோமசேகர், ஐக்கிய ஜனதாதளத்தின் அகில இந்திய மகளிர் அணித் தலைவியான லட்சுமி கோஸ்வாமி ஆகியோரும் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
திருமாவளவன் பேட்டி:
இதற்கிடையே மக்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் பிரச்சாரம் செய்வார் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின்ஒருங்கிணைப்பாளராக பெர்னாண்டஸ் இருப்பதால் தமிழகத்தில் மக்கள் கூட்டணிக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம்செய்யக் கூடாது என்று பா.ஜ.க. கூற முடியாது.
பா.ஜ.க. வேறு, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேறு. தமிழகத்தில் தனக்கு விருப்பமான கூட்டணி வைத்துக்கொள்ள பா.ஜ.கவுக்கு உரிமை உள்ளதுபோல, ஜார்ஜ் பெர்னாண்டஸின் ஐக்கிய ஜனதாதளத்திற்கும் கூட்டணிஅமைக்கும் உரிமை உள்ளது.
எனவே, தமிழகத்தில் மக்கள் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகளுக்கு ஆதரவாக ஜார்ஜ் பெர்னாண்டஸ்பிரச்சாரம் செய்வார் என்றார் திருமாவளவன்.
மக்கள் கூட்டணியில் புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய தலித் கட்சிகளும், மக்கள் தமிழ் தேசம்,இந்திய தேசிய லீக் கட்சியும் இடம் பெற்றுள்ளன.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications