அநாதைகளின் கூடாரமாகி வருகிறது பா.ஜ.க: ராமதாஸ் தாக்கு
தர்மபுரி:
பா.ஜ.க. அநாதைகளின் கூடாரமாகி வருவதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
தர்மபுரி பா.ம.க. வேட்பாளர் செந்திலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்த ராமதாஸ் அங்கு நிருபர்களிடம்கூறிதாவது:
பா.ஜ.க. தனது நாணயத்தையும் ஒழுக்கத்தையும் காற்றில் பறக்க விட்டுவிட்டது. தமிழகத்தில் அந்தக் கட்சிஅனாதைகளின் கூடாரமாக மாறி வருகிறது. அப்படிப்பட்ட அரசியல் அனாதைகளில் ஒருவரை (பு.தா.இளங்கோவன்) தர்மபுரி வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது.
இவர் மக்களால் வெறுக்கப்படும் வேட்பாளர். இதனால் தான் அவருக்கு எங்கள் கட்சியில் சீட் தரப்படவில்லை.பா.ஜ.கவில் மக்களால் விரும்பப்படுகிற ஒரே வேட்பாளர் திருநாவுக்கரசர் மட்டுமே. அவருக்குக் கூட சீட் வாங்கிக்கொடுக்க முடியாதவர் தான் வெங்கையா நாயுடு.
கடந்த நாலரை ஆண்டுகளாக எங்கள் கட்சியில் இருந்து கொண்டே பா.ஜ.கவுக்கு ஆதரவாக கருங்காலியாகஇருந்தவர் தான் இளங்கோவன். அதனால் அவருக்கு சீட் தந்திருக்கிறார் நாயுடு.
இந்த இளங்கோவனுக்கு வன்னியர் சங்கத்தில் மாத ஊதியம் கொடுத்து பொதுச் செயலாளர் ஆக்கினேன். 40வயதான அவருக்கு பெண் தேடினேன். யாரும் பெண் தர முன் வராததால் வன்னியர் சங்கத்தில் பிரச்சாரம் செய்துவந்த பெண்ணை கட்டி வைத்தேன். 3 முறை எம்.பி ஆக்கினேன்.
ஓட்டை சைக்கிளுக்கே வக்கில்லாத இளங்கோவனுக்கு இன்று டெல்லி, சென்னை, தர்மபுரி, புவனகிரியில் 5கார்கள், வீடுகள், பல ஏக்கர் நிலம்.
தனது தந்தை நோய்வாய்ப்பட்டபோது மருத்துவம் பார்க்கக் கூட காசில்லாத இளங்கோவனுக்கு இன்றுசென்னையில் ஒரு கோடி மதிப்பில் வணிக வளாகம் வேறு. சினிமாவுக்கு பைனான்ஸ் செய்கிறார். இந்த சொத்துபத்துக்கள் குறித்து இளங்கோவனிடம் விசாரித்தபோது அப்படியெல்லாம் ஏதும் இல்லை என்றார்.
நான் விசாரித்தவரை அவர் முறைகேடாக செயல்பட்டு சொத்து சேர்த்தார். இதனால் மக்களிடம் கெட்ட பெயர்வாங்கியிருக்கிறார். இதனால் அவருக்கு நான் சீட் தரவில்லை. இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழிக்கு பா.ஜ.க. சீட்தந்திருக்கிறது என்றார் ராமதாஸ்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications