சென்னையில் 3 நாட்களுக்கு பதில் 7 நாள் ஜெ. பிரச்சாரம்
சென்னை:
சென்னையில் 3 நாட்கள் பிரச்சாரம் என்பதை மாற்றி அமைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. மாறாக தற்போது 7நாட்கள் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி உள்ளார். திமுகவின் கோட்டை என்றுகூறப்படும் தலைநகரான சென்னையில் முதலில் 3 நாட்கள் பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது அது கூட்டப்பட்டு 7 நாட்கள் பிரச்சாரம் செய்யவுள்ளார் ஜெயலலிதா.
அதன்படி ஏப்ரல் 4ம் தேதி தென் சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார். அதற்கு அடுத்தநாள் தென் சென்னை, வட சென்னை மற்றும் மத்திய சென்னையில் அவர் பிரச்சாரம் செய்கிறார். பின்னர்பாண்டிச்சேரி கிளம்பிச் செல்கிறார்.
அதன் பின்னர் மீண்டும் மே 4ம் தேதி சென்னையில் தனது பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். அன்றைய தினம் தென்சென்னை மற்றும் மத்திய சென்னையிலும், 5ம் தேதி வட சென்னையிலும், 6ம் தேதி தென் சென்னை மற்றும் மத்தியசென்னையிலும், 7ம் தேதி தென் சென்னை, மத்திய சென்னை மற்றும் வட சென்னையிலும் பிரச்சாரம் செய்கிறார்.
பிரச்சாரத்தின் கடைசி நாளான 8ம் தேதி மத்திய சென்னை மற்றும் தென் சென்னையில் ஜெயலலிதா பிரச்சாரம்செய்கிறார். திமுகவின் கோட்டையான சென்னையில் உள்ள தென் மற்றும் மத்திய சென்னையில் அதிமுகபோட்டியிடுகிறது.
சென்னையில் மொத்தம் 7 நாட்கள் ஜெயலலிதா பிரச்சாரம் செய்வது தனது ஆத்ம நண்பரும், பா.ஜ.க. சார்பில் வடசென்னையில் போட்டியிடும் சுகுமாறன் நம்பியாருக்காகத்தான் என்று கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் குடும்ப நண்பரும், அந்தக் கால வில்லன் நடிகர் நம்பியாரின் மகனுமான சுகுமாறன் நம்பியார்வட சென்னைதொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஆதரவாக ஜெயலலிதா தீவிரப் பிரச்சாரம் செய்யவுள்ளார். வட சென்னை தொகுதியில் மட்டும் அவர் 2நாட்களுக்குப் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
தொழிற்சங்கவாதிகளும், தொழிலாளர்களும், வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களும் அதிகம் உள்ளதொகுதி வட சென்னை. இங்கு பா.ஜ.கவுக்கு எந்த அடிப்படை பலமும் இல்லை என்று பா.ஜ.கவினரே கூறுகிறார்கள்.இந் நிலையில் இத்தொகுதியை பா.ஜ.கவுக்கு ஒதுக்கியுள்ளார் ஜெயலலிதா. இருப்பினும் தனது நண்பர் நிற்பதால்இத்தொகுதியில் அவருக்காக கூடுதல் நேரம் ஒதுக்கியுள்ளார் ஜெயலலிதா.
கர்நாடக வேட்பாளர்கள் மாற்றம்:
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் அதிமுக 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்களை அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா சமீபத்தில் அறிவித்திருந்தார். தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 3தொகுதிகளின் வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். ஒருவரையும் தொகுதி மாற்றியுள்ளனர்.
அதன்படி சிக்பேட்டை தொகுதியில் யுவராஜ், பாரதி நகரில் ஜி.ராஜு, சாந்திநகர் தொகுதியில் ஸ்ரீதர் ஆகியோர்போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காந்தி நகர் தொகுதியில் முன்னாள் கவுன்சிலர் கிறிஸ்டோபர் சக்கரவர்த்தி மாற்றப்பட்டுள்ளார். காந்தி நகர் தொகுதிதமிழர்களிடையே நல்ல செல்வாக்கு பெற்றுள்ளவர் கிறிஸ்டோபர் சக்கரவர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால்தமிழரான அவரை மாற்றிவிட்டு தெலுங்கரான வா.புகழேந்திக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னர் அறிவிக்கப்பட்டபடியே கோலார் தங்கவயல் தொகுதியில் பக்தவச்சலம் போட்டியிடுகிறார்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications