அழகிரியை விடாத மார்க். கம்யூனிஸ்ட்!
மதுரை:
கொலை வழக்கில் உள்ளே போய் தற்போது ஜாமீனில் வெளியாகியிருந்தாலும் கூட மு.க.அழகிரிக்கு மதுரையில் செல்வாக்குஇன்னும் குறையவில்லை என்பதை நாடாளுமன்றத் தேர்தல் நிரூபித்து வருகிறது.
முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அழகிரி தற்போதுஜாமீனில் விடுதலையாகி உள்ளார். தா.கி. கொலைவழக்கில் அழகிரி சிக்கியவுடனேயே அவரது செல்வாக்கு அவ்வளவுதான்என்று திமுகவிலேயே பேச்சு எழுந்தது. இனிமேல் ஸ்டாலினுக்கு நிம்மதி என்றும் கூறினார்கள்.
ஆனால் தான் அவ்வளவு சீக்கிரம் வீழ மாட்டேன் என்பதை அழகிரி மெதுவாக நிரூபித்து வருவதாக மதுரை திமுக வட்டாரத்தில்பேச்சு எழுந்துள்ளது. மாநிலம் முழுக்க ஸ்டாலினுக்கு திமுகவினர் மத்தியில் செல்வாக்கு இருந்தாலும் மதுரையில் இன்னும் அவர்ஒரு பச்சாதான் என்பதை அழகிரி ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கு முக்கிய உதாரணமாக அங்கு தற்போது போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறையைக் கூறலாம்.மதுரை திமுகவினரிடையே அழகிரிக்கு இன்னும் நல்ல செல்வாக்கு உள்ளதை உணர்ந்துள்ள மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி வேட்பாளர் ப.மோகன், தனது தேர்தல் விளம்பர போஸ்டர்கள், சுவர் விளம்பரங்களில் அழகிரியின் பெயரையும்மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
அஞ்சா நெஞ்சன் ஆசி பெற்ற வேட்பாளர் பி.மோகனை ஆதரித்து வாக்களியுங்கள் என்ற வாசகங்களை விளம்பரங்களில்அதிகமாக காண முடிகிறது. இதையடுத்து அவருக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் தனது ஆதரவாளர்களை இறக்கி விட்டுள்ளார்அழகிரி.












Click it and Unblock the Notifications