போலி சாதி சான்றிதழ்: 164 பி.இ. மாணவர்களை டிஸ்மிஸ் செய்ய முடிவு
சென்னை:
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று போலியான சாதிச் சான்றிதழைக் கொடுத்துதமிழகத்தின பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த 164 பேரை டிஸ்மிஸ் செய்ய அண்ணா பல்கலைக்கழகம்முடிவெடுத்துள்ளது.
2002-2003ம் கல்வி ஆண்டில் 6,240 மாணவர்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான கோட்டாவில்பி.இ. மற்றும் பிடெக் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
இவர்களில் சுமார் 1,000 மாணவர்கள் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பொறியியல் கல்லூரிகளில்படிப்பவர்கள்.
இந்த 6,240 மாணவர்களும் கொடுத்த சாதிச் சான்றிதழ்களை அணணா பல்கலைக்கழகம் சரிபார்த்தபோது இதில்சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து 164 மாணவர்கள் போலிச் சான்றிதழ்கொடுத்திருப்பது தெரிய வந்தது.
யாதவ், ரெட்டி என்று முடிவடையும் பெயர்களுடைய மாணவர்களும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பட்டியலில்இடம் பெற்று கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
34 கல்லூரிகளில் படித்து வரும் இந்த மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது. இதற்கான உத்தரவு விரைவில் வெளிவரலாம்.
நந்தனம் பொறியியல் கல்லூரியில் 35 மாணவர்களும், வேல்டெக் பொறியியல் கல்லூரியில் 29 மாணவர்களும்இதுபோன்று போலி சாதி சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டகல்லூரி நிர்வாகத்திற்கும் தொடர்பு இருந்தால் அந்த நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழகம்முடிவு செய்துள்ளது.
-
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications