தனி நபரை விமர்சனம் செய்தால் கட்சி அங்கீகாரம் ரத்து !

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தனி நபர் விமர்சனம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் தலைவர்கள் சார்ந்துள்ள கட்சிகளின் அங்கீகாரத்தைரத்து செய்வது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து வருகிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தரக்குறைவாக விமர்சித்து, முதல்வர் ஜெயலலிதா பேசி வருகிறது. அதேபோல கடந்த சில தினங்களாக சோனியாவை விமர்சித்து தொலைக்காட்சிகளில் ஒரு விளம்பரம்ஒளிபரப்பப்படுகிறது. தனிப்பட்ட நிறுவனங்களின் சார்பில் பெயர் குறிப்பிடப்படாமல் இந்த விளம்பரம்ஒளிபரப்பப்படுகிறது.

இது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் தலைமையில் காங்கிரஸார் தேர்தல்ஆணையத்திடம் புகார் தெரிவித்தது.

இதையடுத்து இது குறித்து தீவிர நடவடிக்கை எடுக்க முடிவெடுத்துள்ளது. தனி நபர் விமர்சனம் செய்யக்கூடாதுஎன்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதை மீறும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல்ஆணையம் ஆலோசித்து வருகிறது.

இது குறித்து வரும் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் இது தொடர்பானபுதிய விதிகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+