சென்னைக்கு மே மாதம் வீராணம் தண்ணீர்: ஜெ. உறுதி
பழனி:
மே மாதம் சென்னை மக்களுக்கு வீராணம் தண்ணீர் கிடைக்கும் என்று பழனி வாக்காளர்களிடம் முதல்வர்ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.
வீராணம் ஏரியில் தண்ணீர் இல்லாத நிலையில், அந்த ஏரியில் பல இடங்களில் ஆழ்குழாய்கள் அமைத்துதண்ணீரை பம்ப் செய்து சென்னைக்கு அனுப்பும் வேலைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. மே 10ம் தேதிதேர்தலுக்கு முன் சென்னையை இந்தத் தண்ணீர் தொட்டுவிட வேண்டும் என்ற தீவிரத்தோடு பணிகள் நடந்துவருகின்றன.
இந் நிலையில் பழனி தொகுதி அதிமுக வேட்பாளர் கிஷோர்குமாரை ஆதரித்து ஆயக்குடி, சத்திரப்பட்டி,விருப்பாச்சி ஆகிய இடங்களில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கவும், தமிழகத்திலிருந்து கேட்கப்படும் நியாயமான கோரிக்கைகளுக்குசெவி சாய்க்கவும் மத்தியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய வேண்டும்.
பிரச்சாரத்தில் நான் கேட்கும் கேள்விகளுக்கு திமுக தலைவர் கருணாநிதியால் பதில் கூற முடியவில்லை.வாஜ்பாயைக் குறை சொல்ல முடியவில்லை. வாஜ்பாய் அரசில் பங்கு கொண்டபோது தமிழகத்தில் பல திட்டங்களைநிறைவேற்ற விடாமல் திமுகவினர் தடுத்தனர்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நான் திட்டியதால்தான் தமிழகத்துக்கு கிருஷ்ணா நீர் கிடைக்கவில்லைஎன்று கருணாநிதி கூறுவதில் உண்மையில்லை. சந்திரபாபு நாயுடு எனது நண்பர். சென்னையின் குடிநீர்பிரச்சனையைத் தீர்க்க தண்ணீர் கேட்டபோது, கிருஷ்ணா நீர் இல்லை என்று தெரிந்ததும் வேறு இடத்திலிருந்துபம்ப் செய்து தண்ணீர் அனுப்பி வைத்தார்.
நான் கடந்த முறை முதல்வராக இருந்தபோது, வீராணம் திட்டத்துக்காக உலக வங்கியிடமிருந்து கடன்வாங்கினேன். ஆனால் அடுத்து முதல்வராக வந்த கருணாநிதி அதைத் திருப்பியனுப்பி விட்டார். இப்போதுபல்வேறு வகையில் நிதியைத் திரட்டி வீராணம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறேன். திட்டப்பணிகள் பெருமளவுமுடிந்து விட்டன. மே மாதம் சென்னைக்கு வீராணம் தண்ணீர் வரும் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications