வைகோவின் புத்தகம் படித்து தூக்கம் தொலைத்தேன்: வைரமுத்து
திருச்சி:
வைகோவின் புத்தகம் படித்துவிட்டு நான் ஒரு நாள் தூக்கம் தொலைத்தேன் என கவிஞர் வைரமுத்து கூறினார்.
நதிகள் இணைப்புக் குறித்து நாடாளுமன்றத்தில் தான் பேசிய பேச்சுக்களை ஒருங்கிணைத்து தாகம் தீர பாசனம் பெறுக என்றநூலை எழுதியுள்ளார் வைகோ.
இந்தப் புத்தகத்தை இன்று திருச்சியில் கவியரசு வைரமுத்து வெளியிட, அதை திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுபெற்றுக் கொண்டார்.
அப்போது வைரமுத்து பேசியதாவது:
வைகோவை எனக்கு பல வழிகளில் பிடிக்கும். தோளில் துண்டை இழுத்து, இழுத்து பேசுகிற வைகோவின் மேனரிசஸம் பிடிக்கும்.அவரது கொள்கை பிடிக்கும். கருணாநிதி மீது அவர் வைத்திருக்கும் பாசத்தை பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். மக்களால்நேசிக்கப்படும் வைகோவை நானும் நேசிக்கிறேன்.
வேலூர் சிறையில் இருந்து கையில் ஒரு பெட்டியுடன் சிரித்த முகத்துடன் வெளியே வந்தார். பூட்டிய இரும்புக் கூட்டில் இருந்துசிறுத்தை வெளியே வருவது மாதிரி எனக்குப் பட்டது. இளைஞர்கள் முதல் அனைத்து வயதினரின் மனங்களிலும் சிம்மாசனம்போட்டு அமர்ந்திருக்கும் தலைவர் வைகோ.
அவரது இந்தப் புத்தகம் வெறும் எழுத்து அல்ல. நதிகள் இணைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் அவர் பேசிய பேச்சுக்களைபுத்தமாக்கியிருக்கிறார். இதைப் படித்த நான் ஒரு நாள் தூக்கத்தைத் தொலைத்தேன். கருத்துக்களில் அத்தனை ஆழம்.
வைகோ ஒரு சிந்தனையாளன். இரவல் சிந்தனையாளர்களுக்கு குழப்பம் வரலாம். வைகோவுக்கு குழப்பம் அது வராது. பேச்சைப்போலவே எழுத்திலும் நிதானம், நியாயம், உண்மையை கடைபிடித்திருக்கிறார்.
விடுதலைக்கு முன் பாரதி கனவு கண்டான். விடுதலைக்குப் பின் வைகோ கனவு கண்டிருக்கிறார். இந்த நதி நீர்த் திட்டம்நிறைவேறினால் இந்தியத் துணைக் கண்டமே வைகோவை வாழ்த்தும். இந்தத் திட்டம் அமலானால் தான் தமிழ்நாடு இந்தியாவில்இருக்கும் என்றார் வைரமுத்து.
-
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ்












Click it and Unblock the Notifications