"வாத்தியாரை" கவுத்திடாதீங்கப்பா!
மதுரை:
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் ஜனதாக் கட்சி சார்பில் போட்டியிடும் சுப்புரமணியம் சுவாமி மற்ற வேட்பாளர்களை விடபடு வித்தியாசமாக பிரசாரம் செய்து வருகிறார்.
மதுரை தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுகிறார் சுவாமி. இந்த முறை அவருக்கு ஆதரவாக ஒரு கட்சியும் இல்லை.சுயேச்சையாக போட்டியிடுகிறார். தோல்வி உறுதி என்று தெரிந்தாலும் கூட மனம் தளராமல் தைரியமாக தொகுதியைச் சுற்றிவருகிறார்.
அதிலும், மற்ற வேட்பாளர்களை விட படு வித்தியாசமாக போஸ்டர்களோ, சுவர் விளம்பரங்களோ இல்லாமல் தொகுதி முழுவதும்நேரடியாக மக்களிடம் சென்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
அத்தோடு நில்லாமல், மாணவர்களையும் அதிக அளவில் சந்திக்கிறார். அவரது பேச்சைக் கேட்க மாணவர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்களிடம் சுவாமி அரசியல் பேசுவதில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரம், வணிகம் உள்ளிட்ட பல விஷயங்களை மாணவர்களிடம் விவாதிக்கிறார். அவரது பேச்சுத் திறமையைப் பார்த்துஅவருக்கு ஆதரவாக மாணவர்கள் திரளுவார்கள் என்பது சுவாமியின் மனக் கணக்கு.
விளம்பரமே இல்லாமல் எப்படி பிரசாரம் என்று சுவாமியிடம் கேட்டால், மதுரை மக்களுக்கு என்னைத் தெரியும், என்செயல்பாடுகளைத் தெரியும், நான் தேர்தலில் போட்டியிடுவதும் தெரியும், எனது சின்னம் தெரியும். பிறகு எதற்காக நான் தனியாகவிளம்பரம் செய்ய வேண்டும். மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்கு கேட்பதையே சிறந்ததாக நான் கருதுகிறேன் என்கிறார் படுதெளிவாக.
மாணவ மணிகளே, "வாத்தியாரை" கவுத்திடாதீங்கப்பா!
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications