கமல்நாத்துக்கு "கெட் அவுட்"; வாசனுக்கு முதல் வெற்றி!
டெல்லி:
தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியிலிருந்து அகில இந்திய பொதுச் செயலாளர் கமல்நாத்நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் மன்மோகன் சிங் தலைமையிலான 3 பேர் குழு வேட்பாளர்களை தேர்வுசெய்யும்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலைத் தேர்வு செய்யும் பொறுப்பு கமல்நாத்திடம்அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இளங்கோவனுடன் சேர்ந்து கொண்டு வாசனை அவர் புறக்கணிப்பதாக பேச்சுஎழுந்தது. அதை நிரூபிக்கும் வகையில், அவர் கொடுத்த வேட்பாளர் பட்டியலில் யாருமே வாசன் ஆதரவாளர்கள்இல்லை.
கொதித்தெழுந்த ஜி.கே.வாசன் வேட்பாளர் தேர்வுக் குழுக் கூட்டத்தைப் புறக்கணித்து விட்டு வெளியேறினார்.பின்னர் கமல்நாத் கூறும் பட்டியலை தான் ஏற்கப் போவதில்லை என்று கட்சி மேலிடத்தில் தெளிவாகக் கூறி விட்டுசென்னைக்கு வந்து விட்டார்.
கட்சியில் உறுப்பினராகவே இல்லாத வழக்கறிஞர் காந்தி என்பவருக்கு பழனி தொகுதி கொடுக்கப்பட்டது.ப.சிதம்பரத்திற்கு சிவகங்கை தொகுதியும், ராசிபுரத்தில் எம்.எல்.ஏ. ஜெயக்குமாருக்கும் சீட் கொடுக்கப்பட்டதைவாசன் கடுமையாக ஆட்சேபித்தார்.
இந் நிலையில் வாசனை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்தன. திமுக தலைவர் கருணாநிதியும், சோனியாவுடன்தொலைபேசியில் பேசி பிரச்சினையை விரைவாக முடிக்குமாறு கோரிக்கை விடுத்தார். அவரும் வழக்கறிஞர்காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து கமல்நாத்தை நீக்கி விட்டு வேறு நபர்களை வைத்து வேட்பாளர்களைத் தேர்வு செய்ய கட்சி மேலிடம்முடிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது மன்மோகன் சிங், பிரனாப் முகர்ஜி, வயலார் ரவி ஆகிய 3 பேர்அடங்கிய குழு தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் என்று கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.
இது வாசனுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக வாசன் ஆதரவாளர்களால் கூறப்படுகிறது. இனிமேல் கமல்நாத்தமிழக காங்கிரஸ் விவகாரத்தில் தலையிட முடியாத அளவுக்கு அவருக்கு வாசன் "ஆப்பு" வைத்து விட்டதாகவேத்தெரிகிறது.
இதற்கிடையே, தேர்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள வயலார் ரவி, டெல்லியில் முகாமிட்டுள்ள இளங்கோவன்,ஆர்.பிரபு, தங்கபாலு ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வாசனுடனும் தொலைபேசியில்பேசியுள்ளார். இதையடுத்து அவரை டெல்லிக்கு வருமாறு அழைத்துள்ளார். அதை ஏற்று இன்று வாசன் டெல்லிசெல்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் வாசன் பேசுகையில், வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாகடெல்லி சென்று மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளேன். 31ம் தேதிக்குள் வேட்பாளர்கள்பட்டியல் வெளியிடப்பட்டு விடும்.
மேலிடத் தலைவர்கள் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்வது குறித்தும் டெல்லியில் தலைவர்களுடன் ஆலோசனைநடத்த உள்ளேன். வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் போன்ற பேரியக்கத்தில் சில கருத்து வித்தியாசங்கள்ஏற்படுவது சகஜமான ஒன்றுதான் என்றார் அவர்.
மாநிலத் தலைவர் என்ற முறையில் வாசனின் கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை, அவற்றை நிராகரிக்க முடியாதுஎன்று வயலார் ரவி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், ப.சிதம்பரத்திற்கு சீட் தர வேண்டிய அவசியம் குறித்தும் வாசனிடம், வயலார் ரவிஎடுத்துரைத்திருப்பதாகத் தெரிகிறது. எனவே யாருக்கு டிக்கெட் பறிபோனாலும், சிதம்பரத்திற்கு நிச்சயம்சிவகங்கை கிடைத்து விடும் எனத் தெரிகிறது.
கமல்நாத்துக்கு கல்தா கொடுக்க வைத்துள்ளதன் மூலம் டெல்லியில் தனது கரத்தை வலுப்படுத்தியுள்ளார்ஜி.கே.வாசன்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications