ஹட்கோ நிறுவன முன்னாள் இயக்குனர் கைது: சிபிஐ அதிரடி
சென்னை:
ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றுக்கு கடன் அளித்த விவகாரத்தில் மத்திய வீட்டு வசதித்துறை வங்கியானஹட்கோவின் முன்னாள் செயல் இயக்குனர் அருண்குமாரை சிபிஐ இன்று கைது செய்ததது.
லஞ்சம் வாங்கிக் கொண்டு, கோயம்பேட்டில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அரிஹந்த் என்ற ரியல்எஸ்டேட் நிறுவனத்துக்கு முறைகேடாக கடன் உதவியளித்தாகவும், கடனைத் திரும்பிப் பெற முயற்சிமேற்கொள்ளவில்லை என்றும் அருண்குமார் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
ஹட்கோ நிறுவன விதிகளின்படி, ஹட்கோவிடம் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் கடன் வாங்கியிருந்தால், தான்கட்டிய வீடுகளை விற்கும்போது ஹட்கோ நிறுவனத்தின் அனுமதி பெற வேண்டும்.
ஆனால் அரிஹந்த் நிறுவனம் அதைச் செய்யவில்லை. ஹட்கோவின் அனுமதி இல்லாமலேயே தனதுஅடுக்குமாடிக் கட்டடத்தில் பல வீடுகளை விற்றுவிட்டது. இதற்காக அப்போதைய ஹட்கோ நிறுவனத்தின்இயக்குனர் அருண்குமாருக்கு அரிஹாந்த் நிறுவனம் பல லட்சம் லஞ்சம் தந்துள்ளது.
இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டது. இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம்அருண்குமாரின் சென்னை வீட்டிலும், ஹைதராபாத் வீட்டிலும் சிபிஐ சோதனை செய்தது. மேலும் சில ஹட்கோநிறுவன ஊழியர்கள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அதே போல அரிஹாந்த் நிறுவனத்தின்அலுவலங்களிலும் ரெய்ட் நடந்தது.
இந் நிலையில் அருண்குமாரை சிபிஐ இன்று கைது செய்து சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தியது.
இதையடுத்து அவரை வரும் 8ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட சிபிஐ சிறப்பு நீதிபதி ராமசாமி,விசாரணைக்காக வரும் 1ம் தேதி வரை சிபிஐ கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் அனுமதியளித்தார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications