கூட்டம் கூடவில்லை: பிரச்சாரத்தை ஒத்தி வைத்த ஜெயலலிதா
விழுப்புரம்:
விழுப்புரத்தில் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா, தனது பிரச்சாரத்துக்கு மக்கள் கூட்டம்கூடாத காரணத்தால் எரிச்சலடைந்து, பிரச்சாரத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார்.
இதையடுத்து அப் பகுதியில் கூட்டம் கூட்டுவதற்கான ஏற்பாடுகளில் அதிமுக நிர்வாகிகள் தீவிரமாகஈடுபட்டுள்ளனர்.
கடலூரில் அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரனுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையிலும், திண்டிவனம்வேட்பாளர் அருண்மொழித் தேவனை ஆதரித்து மடப்பட்டு பகுதியிலும் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.இங்கெல்லாம் கூட்டமே இல்லை.
அதே போல விழுப்பரம் வந்த ஜெயலலிதாவை வரவேற்க சாலையின் இரு புறமும் மக்களே கூடவில்லை. சுமார் 15கி.மீ. தூரத்துக்கு ஜெயலலிதாவின் கார் வரிசை சென்ற பகுதியில் சாலையில் ஈ, காக்கா இல்லை.
இதனால் மூட்-அவுட் ஆன ஜெயலலிதா ஏற்கனவே அவருக்காக தயார் செய்யப்பட்டிருந்த, பாண்டிச்சேரிரோட்டில் உள்ள தொழிலதிபரின் பங்களாவில் தங்கினார். அப்போது கடலூர், திண்டிவனம் வேட்பாளர்களும்கட்சியின் நிர்வாகிகளுக்கும் கடும் டோஸ் விட்டார்.
கூட்டம் சேராத விழுப்புரத்தில் பிரச்சாரம் செய்யத் தயாராக இல்லை என்பதைத் தெரிவித்த ஜெயலலிதா, நேற்றுமதியமே தனது ஓய்வுத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார். இன்று கூட்டத்தை கூட்டும்வேலையில் அதிமுகவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந் நிலையில் நேற்றிகரவு சென்னை திரும்பிய ஜெயலலிதா தேர்தல் வெற்றி வாய்ப்பு, மக்கள் கூடாததற்கானகாரணம் ஆகிய விஷயங்கள் குறித்து உளவுப் பிரிவு அதிகாரிகளுடன் நீண்ட நேரம் ஆலோசனைநடத்தியதாகவும் தெரிகிறது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications