தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

வேதாரண்யம்:

வேதாரண்யம் கோடியக்கரை கடலில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் இரும்புக் கம்பிகளால்தாக்கியதில் 6 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.

வேதாரண்யம் பகுதி மீனவ கிராமமான அக்கரைப் பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த ராமசாமி. இவரது மகன்ஆனந்த், அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன், முருகன், மாரியப்பன், சுப்பிரமணியன், ஆனந்தவேலு ஆகிய 6பேரும் மீனவர்கள் ஒரு படகில் கோடியக்கரை கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த சிங்கள கடற்படையினர் தமிழக மீனவர்களை இரும்பு கம்பிகளால் சரமாரியாகத்தாக்கினர். இதில் மீனவர்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து இலங்கை படையினர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

காயங்களுடன் கரை திரும்பிய 6 மீனவர்களும் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இவர்களுக்கு வேதாரண்யம்அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த மீனவர் ஆனந்த் நாகை அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+