நிருபர்களுக்கு ஐஸ் வைத்த வைகோ
கோவை:
பொடா சிறை வாசத்தின்போது என் மீதும், என் கட்சி மீதும் பத்திரிக்கைகள் காட்டிய பேராதரவுக்கு என்றென்றும்கடமைப்பட்டுள்ளேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக காணப்பட்டார். அவர்பேசுகையில், பொடா சிறைவாசத்தின்போது என்னைப் பற்றியோ, என் கட்சியைப் பற்றியோ, என் கட்சியினர்பற்றியோ ஒரு வார்த்தை கூட பத்திரிக்கைகளில் தவறாக செய்தி வந்ததில்லை.
மதிமுக மீதும், என் மீதும் பத்திரிக்கைகள் அளவு கடந்த ஆதரவை காட்டின.
எனது புகழை அதிகப்படுத்தியுள்ளீர்கள். 10,000 பொதுக் கூட்டங்களில் பேசினாலும் கிடைக்காத பாராட்டைஉங்களது செய்திகள் மூலம் எனக்குத் தேடிக் கொடுத்துள்ளீர்கள்.
உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். எனது இதயத்தின் அடி ஆழத்திலிருந்து நன்றிகூறுகிறேன் என்று வைகோ கூறியபோது, செய்தியாளர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.
பத்திரிக்கையாளர்களை சற்றும் மதிக்காத முதல்வர் ஜெயலலிதா, பாமக நிறுவனர் ராமதாஸ் போன்றஅரசியல்வாதிகளை பார்த்து விட்டு வைகோ போன்ற அரசியல்வாதிகளையும் பார்க்கும் பத்திரிக்கையாளர்களுக்குவைகோவின் பேச்சு நெகிழ்வை ஏற்படுத்தியதில் ஆச்சரியம் இல்லை.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications