விரல் வெட்டி ஏட்டையாவை பணி நீக்கம் செய்ய தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை
சென்னை:
தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விரலை வெட்டிக் கொண்ட ஏட்டையாவைபணி நீக்கம் செய்யக் கோரி தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தேசிய பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் சங்கத்தின் சார்பில் இந்த மனுகொடுக்கப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சேலம் மாவட்டம் காரிப்பட்டினத்தைச் சேர்ந்த ஏட்டையா ரத்தினம் கடந்த மாதம் 9ம் தேதி அப்பகுதியில் உள்ள ராமர் கோவிலுக்குச் சென்று மூன்று விரல்களை வெட்டிப் போட்டுள்ளார்.
தமிழகத்தில் ஜெயலலிதா எல்லா தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்பதற்காக இதைச்செய்ததாக பகிரங்கமாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து நலத்துறை அமைச்சர் செம்மலையைமுதல்வர் ஜெயலலிதா, அனுப்பி வைத்து அந்த ஏட்டையாவுக்கு ஆறுதல் சென்னார்.
அத்தோடு அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் அப்பல்லோவிலும் சேர்த்தார்ஜெயலலிதா. அவரது மருத்துவச் செலவை அதிமுக ஏற்கும் எனவும் அறிவித்தார்.
போலீஸ் பணி நடத்தை விதிப்படி அந்த ஏட்டையா நடந்து கொண்ட முறை சட்ட விரோதமானது.அரசுப் பணியில் இருப்பவர்கள் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாக வெளிப்படையாக செயல்படக்கூடாது.
ஆனால், இந்தத் தவறைச் செய்து தன்னை அதிமுக தொண்டராக அடையாளம் காட்டிவிட்டஏட்டையா ரத்தினத்தை பணி நீக்கம் செய்ய வேண்டும். அவருக்கு பண உதவி செய்த ஜெயலலிதாமீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications