செக்ஸ் டாக்டர் பிரகாஷ் வழக்கு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

செக்ஸ் டாக்டர் பிரகாஷ் வழக்கை பெண் நீதிபதியிடம் இருந்து ஆண் நீதிபதிக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம்அளித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்தது, இன்டர்நெட் மூலம் செக்ஸ் வீடியோவை விற்றது உள்ளிட்டகுற்றங்களுக்காக டாக்டர் பிரகாஷ், நிக்சன், சரவணன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வழக்கு விசாரணை சென்னை 5வது விரைவு நீதிமன்ற நீதிபதி சாவித்திரி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்தவழக்குத் தொடர்பான ஆபசப் படங்கள், ஆபாசமான விஷயங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்பதால்பெண் நீதிபதி இதை விசாரிப்பது சரியாக இருக்காது என்று கூறி நிக்சன் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில்மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் இந்த வழக்கை ஆண் நீதிபதிக்கு மாற்றக் கோரியிருந்தார் நிக்சன். அந்த மனுவை விசாரித்த நீதிபதிஅசோக்குமார், பிரகாஷிடமிருந்து கைப்பற்ற சிடிக்களை பெண் நீதிபதியின் அறையில் பார்ப்பது தர்மசங்கடமாகஇருக்கும் என்று குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் கூறியுள்ளார். மேலும், இவ்வழக்கு பெண்களைஆபாசமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியது தொடர்பானதாகும்.

எனவே, வழக்கு விசாரணையை 5 வது விரைவு நீதிமன்ற நீதிபதி சாவித்திரியிடம் இருந்து 4 வது விரைவுநீதிமன்றத்தின் ஆண் நீதிபதிக்கு மாற்ற வேண்டும். வழக்கு விசாரணையை துரிதமாக நடத்தி முடிக்க வேண்டும்என்று உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து, இந்த வழக்கில் முக்கிய சாட்சியான பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.அவர் தனது மனுவில், உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, வரதட்சணைக் கொடுமை, பாலியல் பலாத்காரம்,பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பெண் நீதிபதிகளே விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின்உத்தரவுக்கு முற்றிலும் முரணானது.

எனவே இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, நீதிபதி பி.பி.சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. மேலும் இந்த மனு தொடர்பாக பதிலளிக்குமாறு தமிழகஅரசுக்கும், பிரகாஷ் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+