விரைவில் வருவேன்.. மனம் திறப்பேன்.. ரஜினி
சென்னை:
மதுரையில் என் ரசிகர்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவம் என்னை மிகவும் உலுக்கி விட்டது. விரைவில் சென்னை வந்து மனம்திறக்கிறேன். அதுவரை பொறுமையாக இருக்கவும் என்று நடிகர் ரஜினி காந்த் கூறியுள்ளார்.
தனது சொந்த மாநிலமான கர்நாடகத்தில் உள்ள சிருங்கேரி சென்றுள்ள ரஜினிகாந்த், மதுரை சம்பவம் குறித்து வெளியிட்டுள்ளஅறிக்கையில்,
மதுரையில் என் ரசிகர்கள் பா.ம.கவினரால் தாக்கப்பட்ட சம்பவம் என்னை உலுக்கி விட்டது. சிருங்கேரியிலிருந்து உடனடியாகமதுரை கிளம்ப முடிவு செய்தேன். ஆனால் நான் அங்கு சென்றால் ரசிகர்கள் மிகவும் கொந்தளித்துப் போய் விடுவார்கள் என்பதால்புறப்படவில்லை.
விரைவில் சென்னை திரும்புகிறேன். அப்போது பத்திரிக்கையாளர்களை சந்திக்கப் போகிறேன். அவர்களிடம் நான் வாய் திறக்கப்போவதில்லை, மனம் திறக்கப் போகிறேன். அதுவரை ரசிகர்கள் மிகவும் அமைதியாக இருந்து பொறுமை காக்க வேண்டும் என்றுகூறியுள்ளார் ரஜினி.
மதுரை சம்பவம் ரஜினி தரப்பை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. மதுரை சம்பவத்தை வைத்து ரஜினியேநேரடியாக அரசியல் களத்தில் இறங்கும் வாய்ப்புள்ளதாகவும் அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications