தங்கபாலுவுக்கு காங்கிரஸார் கறுப்பு கொடி!
சேலம்:
சேலம் ரயில் நிலையத்தில், அத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தங்கபாலுவுக்கு அதிருப்தி காங்கிரஸார் கருப்புக்கொடி போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது.
சேலம் தொகுதியில் தங்கபாலுவுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி கோஷ்டியினர் கடும்கடுப்படைந்துள்ளனர். அங்கு வன்னியர் ஒருவருக்கே சீட் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கட்சிமேலிடம் நிராகரித்து விட்டதாக அவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
இந் நிலையில் திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆசி பெற்ற தங்கபாலு இன்று சேலம் சென்றார். ஆனால் சேலம்ரயில் நிலையத்தில் அவருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. 200க்கும் மேற்பட்ட அதிருப்தி கோஷ்டிதொண்டர்கள் ரயில் நிலையத்தில் கூடியிருந்து தங்கபாலுவுக்கு எதிராகக் கோஷமிட்டபடி இருந்தனர்.
இதனால் தங்கபாலுவால் ரயில் நிலையத்திலிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், தங்கபாலுஆதரவாளர்களுக்கும் அதிருப்தியாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலையும் காணப்பட்டது.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து அதிருப்தியாளர்களை அங்கிருந்து அகற்றினர். அதன் பிறகே தங்கபாலுரயில் நிலையத்தை விட்டு வெளியேறினார். அங்கிருந்து நேராக சேலம் மாவட்ட திமுக செயலாளர் வீரபாண்டிஆறுமுகம் வீட்டுக்கு தங்கபாலு சென்று தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொண்டார்.
10ம் தேதி முதல் வாசன் பிரசாரம்
இதற்கிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வரும் 10ம் தேதி முதல் தனது தேர்தல் பிரசாரத்தைதொடங்கவுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெற்றிகரமாக வெளியாகியுள்ள நிலையில் சென்னைதிரும்பிய ஜி.கே.வாசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, வருகிற 10ம் தேதி முதல் கட்டப் பிரசாரத்தைத் தொடங்கவுள்ளேன். 40 தொகுதிகளிலும் பிரசாரம்செய்யத் திட்டமிட்டுள்ளேன்.
தமிழகத்தில் சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் பிரசாரம் செய்ய வருவார்கள். அதற்கான திட்டம்வகுக்கப்பட்டு வருகிறது.
சென்னை குடிநீர்ப் பிரச்சினையில் கருணாநிதி துரோகம் செய்து விட்டதாக ஜெயலலிதா கூறுகிறார். ஆனால்உண்மையில் துரோகம் இழைத்தது ஜெயலலிதாதான்.
சென்னைக் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பாக ஆந்திராவுக்கு விரைந்து சென்று அம்மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடுவை சந்தித்துப் பேசும் ஜெயலலிதா, காவிரிப் பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்வரை சந்திக்க மறுத்ததுஏன்? இதை ஜெயலலிதா விளக்க வேண்டும் என்றார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications