அரசியல் கலாச்சார சீரழிவு: கருணாநிதி வருத்தம்
சென்னை:
அரசியல் கலாச்சாரம் சீரழிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உயிருடன் இருப்பதற்காக வருத்தப்படுகிறேன்என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
பெருந் தலைவர் காமராஜர் குறித்து பத்திரிக்கையாளர் வீரபாண்டியன் எழுதியுள்ள ஆகட்டும் பார்க்கலாம் என்றபுத்தகத்தை கருணாநிதி வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில்,
திமுகவும், காங்கிரஸும் எதிரெதிர் அணியாக இருந்தபோது, காமராஜருக்கு எதிராக அண்ணாவோ அல்லதுநானோ அபவாத சொற்களை வீசியதில்லை, தரக்குறைவான முறையில் நடந்து கொண்டதும் இல்லை. தனிப்பட்டவிரோதம் பாராட்டியதுமில்லை.
பெரியார், அவருக்குப் பிறகு அண்ணா, அவருக்குப் பிறகு காமராஜர் என அத்தனை அரசியல் தலைவர்களும்அரசியல் கலாசாரத்தையும் பண்பாட்டையும் கட்டிக் காத்தனர். எனக்கு அரசியல் கலாசாரத்தைக் கற்றுக்கொடுத்தவர்கள் அவர்கள் தான்.
ஜாதி, மத பைத்தியக்காரத்தனத்தை சமுதாயத்தில் இருந்து ஒழித்திட காமராஜரின் போதனைகளை அனைவரும்படித்திட வேண்டும். அவரது சிந்தனைகள் இந்த சமூகத்துக்கு இன்றும் தேவை.
காமராஜருக்கு எதிராக 1967ம் ஆண்டு நடந்த விருதுநகர் தேர்தலில் சீனிவாசனை வேட்பாளராக நிறுத்திகாமராஜரைத் தோற்கடித்ததற்காக திமுக எப்போதும் வருத்தப்பட்டிருக்கிறது. இப்போதும் வருத்தப்படுகிறது.(சீனிவாசன் தற்போது அதிமுகவில் உள்ளார்).
குடியாத்தம் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலின்போது காமராஜர் போட்டியிட திமுகவும், திகவும் ஆதரவுஅளித்தன. ஆனால் கம்யூனிஸ்டுகள் அப்போது அதை எதிர்த்தனர்.
காமராஜர் காலத்தையும் இப்போதைய காலத்தையும் பார்க்கும்போது ஏன் தான் உயிருடன் இருக்கிறோமோ என்றுநினைக்கத் தோன்றுகிறது என்று வேதனையுடன் கூறினார் கருணாநிதி.
இந் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள் ஜி.கே.வாசன், குமரி அனந்தன், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்தா.பாண்டியன், கவிஞர்கள் வைமுரத்து, அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications