ரஜினி ரசிகர்கள் மீதான தாக்குதலில் அரசுக்கும் பங்குண்டு: நல்லக்கண்ணு
சென்னை:
மதுரையில் ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்டதில் தமிழக அரசுக்கும் பங்கிருப்பதாகக் கருதுகிறோம் என்று இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லக்கண்ணு கூறியுள்ளார்.
கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்ட அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
தமிழக அரசு எஸ்மா, டெஸ்மா சட்டங்களை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து உள்ளது. தேர்தல் நேரத்தில் அரசுஊழியர்களை அச்சுறுதி தனக்கு கட்டுப்பட வைப்பதற்காகவே இந்தச் சட்டத்தை நீட்டித்துள்ளது.
அரசின் தவறான கொள்கையினால் தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது. இப்போதுவறண்டு கிடக்கும் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் வரும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறுவது ஏற்கக்கூடியதுஅல்ல.
மக்களை திசை திருப்புவதற்காக தனி நபர் விமர்சனங்களை பா.ஜ.கவும், அதிமுகவும் செய்து வருகின்றன.
மண்ணின் மைந்தர் என்ற புதிய கோஷத்தை ஜெயலலிதா எழுப்பி வருகிறார். அப்படிப் பார்த்தால் ஜெயலலிதா கூடதமிழக முதல்வராகி இருக்க முடியாது.
தஞ்சை வந்த ஜெயலலிதாவுக்கு காவிரி தொடர்பாக கண்டனம் தெரிவிக்க கறுப்புக் கொடி காட்ட கம்யூனிஸ்ட்கட்சியினர் முயன்றனர். அப்போது எங்கள் தொண்டர்களை கண் காணாத தூரத்திலேயே போலீஸார்நிறுத்திவிட்டனர். ஆனால், பாமக நிறுவனர் ராமதாஸ் பேசிய மேடைக்குப் பக்கத்திலும், அவர் சென்ற வழியிலும்ரஜினி ரசிகர்கள் கறுப்புக் கொடி அனுமதித்துள்ளனர்.
எனவே, ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்டதில் அரசுக்கும் தொடர்புள்ளது என்றார் நல்லக்கண்ணு.
முன்னதாக அவர் வெளியிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பொருளாதார கொள்கை,மதச்சார்பின்மை, குடிநீர் மற்றும் காவிரி பிரச்சினை, நதி நீர் இணைப்பு, தொழிலாளர்கள் மற்றும் விவசாய நலன்,உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications