இலங்கை: பிரதமராக பதவியேற்றார் மகிந்தா- புலிகளுடன் பேச்சு தொடரும் என அறிவிப்பு
கொழும்பு:
இலங்கையின் புதிய பிரதமராக மகிந்தா ராஜபக்சே இன்று பதவியேற்றுக் கொண்டார்.புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடக்கும் என அவர் உறுதியளித்தார்.
பதவியேற்றவுடன் இலங்கைக்கான இந்தியத் தூதர் நிரூபம் சென்னை அவர் நேரில் சென்று சந்தித்துஅமைதி முயற்சிகளில் இந்தியாவும் பங்கேற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார் மகிந்தா.
முன்னதாக தமிழரான லட்சுமண் கதிர்காமரை பிரதமராக்க வேண்டும் என அதிபர் சந்திரிகாவின்கூட்டணியில் உள்ள ஜனதா விமுக்தி பெரமுனா கோரிக்கை வைத்தது. கடந்த காலத்தில் தங்களுடன்மோதல் போக்கை கடைபிடித்த மகிந்தாவை பிரதமராக்க அக் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
இதனால், கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து நேற்று முழுவதும் தீவிரஆலோசனைகளில் ஈடுபட்டிருந்தார் சந்திரிகா. நேற்று நடந்திருக்க வேண்டிய பிரதமர் பதவியேற்புநிகழ்ச்சியையும் ரத்து செய்தார்.
பிரதமர் பதவி தவிர முக்கியமான அமைச்சரவைகள் ஏதும் மகிந்தாவுக்குத் தர மாட்டேன் என்றுசந்திரிகா உறுதியளித்து ஒருவழியாக ஜே.வி.பியை சமாதானப்படுத்தினார். இதையடுத்து புதியபிரதமராக 58 வயதான மகிந்தா ராஜபக்சே அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து ராஜபக்சே இன்று காலை அதிபர் மாளிகையில் நடந்த மிக எளிமையானநிகழ்ச்சியில் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சியைப் புறக்கணித்த ஜே.வி.பி எம்.பிக்கள், நிகழ்ச்சி முடிந்தவுடன் தான்வந்தனர். சந்திரிகாவின் கட்சியைச் சேர்ந்த ராஜபக்சே பதவியில் நீடிக்க ஜே.வி.பியின் ஆதரவு மிகமிக அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்புக்கு முன் நிருபர்களிடம் பேசிய ராஜபக்சே, இலங்கை அமைதி முயற்சிகளில் இந்தியாவும்உடனடியாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவர்கூறுகையில், எங்களது அருகாமையில் உள்ள பெரிய நாடு இந்தியா. இதனால் இலங்கையில்அமைதி திரும்ப இந்தியாவின் பங்கு மிக மிக அவசியம்.
நார்வே உதவியுடன் புலிகளுடன் நடக்கும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றார்.
ராஜபக்சேவுக்கு பிரதமர் பதவியுடன், நெடுஞ்சாலைத்துறையை மட்டுமே ஒதுக்கியுள்ளார் சந்திரிகா.அதிகாரம் இல்லாத இந்தத் துறையை வைத்துக் கொண்டு ராஜபக்சே பெயரளவுக்கே பிரதமராகஇருப்பார் என்று கருதப்படுகிறது.
முன்னதாக தனது அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கதிர்காமரைபிரதமராக்கினால் புலிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க வசதியாக இருக்கும் எனசந்திரிகாவின் கூட்டணிக் கட்சிகள் நினைத்தன.
ஆனால், இதற்கு சந்திரிகாவின் கட்சியில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இலங்கையில்முதல்முறையாக தமிழர் ஒருவர் பிரதமராவதற்கான வாய்ப்பு பறிபோய்விட்டது.
இந் நிலையில் நேற்று நள்ளிரவு வரை நீடித்த ஆலோசனைகளையடுத்து மகிந்தா ராஜபக்சேபிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
பதவியேற்ற கையோடு இலங்கைக்கான இந்தியத் தூதர் நிரூபம் சென்னை, மகிந்தா சந்தித்துப்பேசினார்.
70ம் ஆண்டுகளில் இருந்தே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் மகிந்தா தீவிரமானசந்திரிகா ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தீவிர இனவாத சிந்தனைகள்இல்லாதவர். வழக்கறிஞரான மகிந்தா, சந்திரிகாவின் அமைச்சரவையில் மீன் வளம் மற்றும்தொழிலாளர் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
வரும் 22ம் தேதி நாடாளுமன்றத்தில் இவர் தனது பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும்.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, பெரும்பான்மைஇல்லாத இந்த அரசால் அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்த முடியாது. அதே போல பொருளாதாரவளர்ச்சிக்கும் இந்த அரசால் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை என்றார்.












Click it and Unblock the Notifications