இலங்கை கடற்படை கப்பல் மோதி நாகை மீனவர் மரணம்: உடல் ஒப்படைப்பு
ராமேஸ்வரம்:
இலங்கை கடற்படை கப்பல் மோதி நாகப்பட்டனத்தைச் சேர்ந்த மீனவர் உயிரிழந்தார். அவரது உடலை இலங்கைகடற்படையினர் தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
நாகப்பட்டனம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்களது படகுகளில் கடந்த வாரம் இலங்கை கடற்பகுதிக்குஅருகே உள்ள நெடுந்தீவு என்ற இடத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது இலங்கை கடற்படைக் கப்பல் அங்கு வந்து, தமிழக மீனவர்களின் படகுகள் மீது மோதித் தாக்கியது.மேலும் மீனவர்களையும் அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தினர். இதில் 6 பேர் படுகாயமடைந்தனர்.அனைவரையும் இலங்கை கடற்படையினர் கொண்டு சென்று விட்டனர்.
இவர்களில் செருதூர் என்ற ஊரைச் சேர்ந்த வெற்றிவேல் என்ற மீனவர் இறந்து விட்டார். அவரது உடலைஒப்படைக்கக் கோரி கடந்த 3 நாட்களாக நாகை பகுதி மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்து வந்தனர். இந் நிலையில்,ராமேஸ்வரத்தில் இந்திய கடற்படை அதிகாரிகளிடம், வெற்றிவேல் உடலை இலங்கை கடற்படையினர்ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications