செருப்பு ஊழல்: இந்திரகுமாரி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை:
முன்னாள் அமைச்சர்கள் இந்திரகுமாரி, ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மீதான இலவச செருப்பு ஊழல் வழக்கில் வரும்16ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று முதலாவது தனி நீதிமன்ற நீதிபதி மதிவாணன் அறிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கடந்த பள்ளி மாணவர்களுக்கு இலவச செருப்புகள் வழங்குவதில் ரூ. 1.10கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சர்கள் இந்திரகுமா, ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட 21 பேர்மீது கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு முதலாவது தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு தான் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த மாதம் 23ம் தேதி சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது.
இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு ஏப்ரல்7ம் தேதி (இன்று) வழங்கப்படும் என்று நீதிபதி மதிவாணன்அறிவித்திருந்தார். இதனால் இந்திரகுமாரி, ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் இன்று காலை நீதிமன்றத்திற்குவந்திருந்தனர்.
ஆனால், இன்று தீர்ப்பு வழங்கப்படவில்லை. தீர்ப்பை வரும் 16ம் தேதி வழங்குவதாக நீதிபதி இன்று அறிவித்தார்.
வரும் 16ம் தேதி சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் மீது ஜீவஜோதி தொடர்ந்த வழக்கிலும் தீர்ப்புவழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு











Click it and Unblock the Notifications