கொள்ளையில் ஈடுபட்ட ஆயுத படை போலீஸார்!!
மதுரை:
நெல்லையில் நகைக்கடை உரிமையாளர்களைத் தாக்கி, நகைகளைக் கொள்ளையடித்த சம்பவத்தில் மதுரையைச்சேர்ந்த ரிசர்வ் போலீஸ் (ஆயுதப்படை போலீஸார்) படையைச் சேர்ந்த 4 காவலர்கள் உள்பட 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 5ம் தேதி சென்னையைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர்கள் லலித்குமார், கந்திலால் ஆகியோர்நெல்லை வந்தனர். அங்கு தங்களது வியாபார வேலைகளை முடித்துக் கொண்டு ரயில் மூலம் சென்னை திரும்பநெல்லை ரயில் நிலையத்துக்கு வந்தனர்.
அப்போது, சிலர் அவர்களைத் தாக்கிவிட்டு, அவர்கள் வசமிருந்த ரூ.18 லட்சம் மதிப்பிலான தங்கபிஸ்கட்களையும், நகைகளையும் கொள்ளையடித்துவிட்டுத் தப்பினர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வந்தனர்.
இந் நிலையில், இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர். இவர்களில்4 பேர் ஆயதப் படை போலீஸார் என்ற அதிர்ச்சியான தகவல் விசாரணையில் தெரிய வந்தது.
இவர்களிடம் இருந்து 727 கிராம் தங்கமும், ரூ.18,000 பணமும் கைப்பற்றப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்குதொடர்பாக மேலும் ஒருவர் சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இவர்கள் அனைவரிடமும்விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த வருடம் திருச்செந்தூரில் ஒரு நகைக் கடை கொள்ளைக்கு உதவியதாக ஒரு போலீஸ்காரர் கைதுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications