ரசிகர்கள் மீது தாக்குதல் தொடர்கிறது
சேலம்:
மதுரையையடுத்து ரஜினி ரசிகர்கள் மீதான தாக்குதலை பாமகவினர் தொடர்ந்து வருகின்றனர்.
மதுரையில் ராமதாசுக்கு கருப்புக் கொடி காட்டிய ரஜினி ரசிகர்களை பா.ம.க. தொண்டர்கள் தாக்கினர். இதில் பலர்படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து புதுவையிலும் நேற்று ரஜினிரசிகர்கள் சிலர் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
இந் நிலையில் சேலத்திலும் ரஜினி ரசிகர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. சேலத்தில் நடந்த உண்ணாவிரதப்போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கொண்டலாடம்பட்டியைச் சேர்ந்த ரசிகர்கள் சிலர் ஆட்டோவில் வந்தனர்.
அந்த ஆட்டோ கரட்டூர் என்ற இடத்தில் வந்தபோது சித்தராஜு என்பவர் ஆட்டோவை வழிமறித்து நிறுத்தினார்.இவர் அப் பகுதி பாமக பிரமுகர் என்று கூறப்படுகிறது. ஆட்டோ நின்றவுடன், டிரைவர் குமாரை தாக்கி உதைத்தார்.பின்னர் ஆட்டோவில் கட்டப்பட்டிருந்த ரஜினி ரசிகர் மன்ற கொடியையும் பிடுங்கி எறிந்தார்.
உள்ளே உட்கார்ந்திருந்த சில ரசிகர்களுக்கும் அடி விழுந்தது.
இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டதையடுத்து சித்தராஜு கைது செய்யப்பட்டார்.
போராட்டத்தை கைவிட்ட ரசிகர்கள்:
இதற்கிடையே மதுரையில் ராமதாசுக்கு கருப்புக் கொடி காட்டி, பா.ம.கவினரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டதையடுத்து தற்போதைக்கு ராமதாசுக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் எதையும் நடத்த வேண்டாம்என ரசிகர்களுக்கு ரஜினி தரப்பில் இருந்து அறிவுரை கூறப்பட்டுள்ளது.
டாக்டர் ராமதாஸுக்கு எதிராக மதுரையில் கருப்புக் கொடி காட்டிய ரசிகர்களை, பாமக தொண்டர்கள் உருட்டுக்கட்டைகள், இரும்புக் கம்பிகள், அரிவாள்களால் விரட்டி விரட்டித் தாக்கினர். ரெளடிக் கும்பலை விட மிகமோசமாக நடந்து கொண்ட பா.ம.கவினரின் தாக்குதலில் சில ரசிகர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதில் ஒரு ரசிகர் அப்பல்லோவில் அனுமதிக்கப்படும் அளவுக்கு அடி வாங்கியுள்ளார். அவருக்கு ரூ. 1 லட்சம்உதவியையும் ரஜினி அறிவித்துள்ளார்.
இந் நிலையில் ரசிகர்கள் தற்போதைக்கு கருப்புக் கொடி போராட்டங்களை நடத்த வேண்டாம் என்றும் ரஜினி தனதுமுக்கிய முடிவை அறிவிக்கும் வரை அமைதி காக்குமாறும் ரசிகர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எந்த ரசிகரும், யாராலும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமுடன் இருக்குமாறு மாவட்ட ரஜினிரசிகர் மன்றத் தலைவர்களுக்கும் சத்யநாராயண ராவிடம் இருந்து உத்தரவு வந்துள்ளது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications