நீதி வென்றது!
பழனி:
பொடா வழக்கிலிருந்து தன்னையும், மற்ற 8 மதிமுகவினரையும் பொடா மறு ஆய்வுக் குழு விடுவித்துள்ளதன்மூலம் நீதி வென்றுள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினர் மீதான பொடா வழக்கில் பூர்வாங்க ஆதாரம் இல்லை என்று கூறி அவர்களை வழக்கிலிருந்துவிடுவித்து பொடா மறுஆய்வுக் குழு உத்தரவிட்டுள்ளது.
இந்த செய்தி, பழனியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த வைகோவிடம் தெரிவிக்கப்பட்டது. செய்தியைக் கேட்டதும் அவர்மகிழ்ச்சியடைந்தார். அவர் கூறுகையில், நான் பழனியில் இருக்கிறேன். இந்த செய்தி எனக்கும், தமிழையும், சுதந்திரத்தையும்விரும்புவோருக்கு பஞ்சாமிர்தம் போல இனிக்கிறது.
யார் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் கடைசியில் நீதிதான் வெல்லும் என்பதையே இந்த தீர்ப்புஉறுதிப்படுத்துகிறது. தொடர்ந்து அவர் கூறுகையில், நீதித்துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. மறுஆய்வுக் குழுவின்முடிவுதான் இறுதியானது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொடா மறு ஆய்வுக் குழுவின் தீர்ப்பையே இறுதி தீர்ப்பாக நீதித்துறை எடுத்துக் கொள்ளும் என்று நம்புகிறேன். ஒரு தவறும்செய்யாமல் நான் உள்ளிட்ட 9 மதிமுக தோழர்களும் ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் அடைபட்டுக் கிடந்தோம்.
பேச்சு சுதந்திரத்திற்குக் கிடைத்த வெற்றியாக மறுஆய்வுக் குழுவின் தீர்ப்பைக் கருதுகிறேன். நாங்கள் யாரும் வன்முறையையோ,விதி மீறலையோ செய்யவில்லை என்பதை தீர்ப்பு நிரூபிக்கிறது.
தமிழ் ஈழ மக்களுக்கு ஆதரவாக பேசுவது தவறில்லை என்பதையும் இந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது. இப்போது தேர்தல்காலம். எனவே இந்த தீர்ப்பை பார்க்கும் மக்கள் தங்களது தீர்ப்பை சரியாக, தெளிவாக, உறுதியாக அறிவிப்பார்கள் என்றுநம்புகிறேன் என்றார் வைகோ.
பின்னர் மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகம் முழுவதும் அதிமுக எதிர்ப்பு அலை பலமாக வீசிக்கொண்டுள்ளது. அதிமுக ஆட்சியினால் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது உருவாகியுள்ள ஜனநாயக முற்போக்குக் கூட்டணியானது, அதிமுகவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள அணி. இந்தக்கூட்டணி வரும் சட்டசபைத் தேர்தலிலும் தொடரும், அதில் எந்த மாற்றமும் இல்லை.
ரஜினி ரசிகர்கள் தங்களது ஆதரவை யாருக்கு வேண்டுமானாலும் தெரிவிக்கலாம், அது அவர்களது சுதந்திரம். இருப்பினும்அவர்களது பாமக எதிர்ப்பால், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட மாட்டாது என்றார் வைகோ.
-
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications