திமுகவை எதிர்க்கவில்லை: கருணாநிதியிடம் ரஜினி உறுதி- ஸ்டாலின்
உதகமண்டலம்:
ரஜினிகாந்த் திமுகவுக்கு எதிராக செயல்பட மாட்டார் என அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின்கூறியுள்ளார்.
ஊட்டியில் (உதகமண்டலம்) செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சில இடங்களில் ரஜினிகாந்த் ரசிகர்கள்எடுத்துள்ள முடிவு ரஜினியைக் கட்டுப்படுத்தாது. அவர் திமுகவை எதிர்த்து செயல்பட மாட்டார். இது தொடர்பாககருணாநிதியிடம் அவர் உறுதி அளித்துள்ளார்.
ரஜினி ரசிகர்களின் பாமக எதிர்ப்பால், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது. 40தொகுதிகளிலும் நாங்கள் வெல்வோம் என்றார்.
பின்னர் குன்னூர், அருவங்காடு, எல்லனள்ளி, வேலி வியூ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீலகிரி காங்கிரஸ்வேட்பாளர் பிரபுவுக்கு ஆதரவாக ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
ரஜினியால் பிரச்சனையில்லை: நெப்போலியன்
இந் நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகரும், திமுக எம்.எல்.ஏவுமான நெப்போலியன்,
தனது ஆதரவு யாருக்கு என்பதை ரஜினிகாந்த் வாய் திறந்து சொல்லவில்லை. அவரது ரசிகர்கள்தான் பேசிவருகிறார்கள். எனவே ரஜினி ரசிகர்களின் பாமக எதிர்ப்பால் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது.
ரஜினி திமுக கூட்டணிக்கு ஆதரவாகத்தான் இருப்பார் என்று கருணாநிதி கூறியுள்ளார். அவரது வார்த்தைகளையேநாங்கள் நம்புகிறோம். 35 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று முன்பு கணித்திருந்தோம். போகிற போக்கையும்,மக்கள் மன மாற்றங்களையும் பார்த்தால் கூடவே சில தொகுதிகள் கிடைக்கும் என்று ஊகிக்கிறோம் என்றார்நெப்போலியன்.

ராதிகாவிடம் ஓட்டு கேட்ட பாலு:
நடிகர் சரத்குமார்- ராதிகா ஆகியோரின் வீட்டுக்குச் சென்று தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர்டி.ஆர்.பாலு ஒட்டுக் கேட்டார்.
தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு சென்னைகொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமாரின் வீட்டுக்குச் சென்றார்.அவரை சரத்குமாரும், ராதிகாவும் வரவேற்றனர்.பின்னர் தனக்கு உதயசூயன் சின்னத்தில் வாக்களிக்குமாறு டி.ஆர்.பாலு சிரித்தவாறே கேட்டார்.
பின்னர் பிரசாரத்தை எப்போது தொடங்குகிறீர்கள் என்று சரத்குமாரிடம் டி.ஆர்.பாலு விசாரித்தார். விரைவில்தொடங்கவுள்ளதாக சரத்குமார் பதிலளித்தார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!

Click it and Unblock the Notifications