என் நண்பர்கள் வீட்டில் தஞ்சம் புகுந்ததால் ராமதாஸ் தப்பிவிட்டார்- ரஜினி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராமாதஸ் என் நண்பர்களின் (திமுக கூட்டணி) வீட்டில் தஞ்சம் புகுந்ததால், அவரை இத்தோடுவிட்டுவிடுகிறேன் என்று ரஜினி கூறினார்.

இன்று நிருபர்களுக்கு ரஜினி அளித்த பேட்டி விவரம்:

என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக மக்களே, ரசிகர்களே,

பா.ம.க. தொண்டர்களையும் வன்னிய சமுதாய நண்பர்களையும் நான் மனம் திறந்து கேட்கிறேன்.டாக்டர் ராமாதாசை நான் என்றைக்காவது தரக்குறைவாக பேசி இருக்கிறேனா?. அவருக்கு ஏதாவதுகெடுதல் செய்திருக்கிறேனா?

ஆனால், பாபா படம் வெளியானபோது அதில் நான் சிகரெட் புகைப்பது, மது அருந்துவது போன்றகாட்சிகளில் நடித்ததால் இளைஞர்கள் கெட்டுப் போய்விட்டார்கள் என்று சொல்லி படப்பெட்டியைக் கடத்தி,

படச் சுருளை எரித்து, தியேட்டர் ஸ்கீரின்களைக் கிழித்து, ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வீடுகளைத்தாக்கி- எரித்து, திரையரங்கு மேனேஜர்களை கடத்தி, பொது மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி,தியேட்டர் உரிமையாளர்களையும் வினியோகஸ்தர்களையும் மிரட்டி கோடிக்கணக்கில் நஷ்டத்தைஏற்படுத்தினார்கள்.

ரசிகர் மன்ற போர்டுகளை உடைத்துப் போட்டார்கள். ரசிகர்களின் நெற்றியில் நான் ஒரு முட்டாள்என்று எழுதி கேவலப்படுத்தினார்கள். இதனால் என் ரசிகர்கள் கொதித்துப் போனார்கள்.

ராமதாஸ் அவர்கள் என்னைவிட வயதில் மூத்தவர், என்னை விட அதிகம் படித்தவர், பெரியகட்சியின் தலைவர். அவர் என்னை வீடு தேடி வந்து சந்தித்திருக்க வேண்டும் என்று கூட சொல்லமாட்டேன்.

ஒரு போன் செய்து, தம்பி சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளை வைக்காதேஎன்று சொல்லி இருக்கலாம். நான் அந்தக் காட்சிகளை நீக்கியிருப்பேன், அல்லது அடுத்த படத்தில்அது போன்ற காட்சி இல்லாமல் பார்த்துக் கொண்டிருப்பேன்.

என்னிடம் பேச விரும்பாவிட்டால் சென்சார் போர்டை அணுகி அந்தக் காட்சிகளை வெட்டச்சொல்லியிருக்கலாம். ஒரு படித்தவருக்கு, வயதில் மூத்தவருக்கு அதுதானே அழகு? நியாயம்?.

அதை விட்டுவிட்டு கோடானுகோடி பண முதலீட்டில் படத்தை தயாரித்த பிறகு அதை வெளியிட்ட பிறகு,இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான நாச வேலையில் ஈடுபட்டது சரியா? இதனால் என் ரசிகர்கள்கொந்தளித்துப் போயிருந்தார்கள். அப்போது அவர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டேன்,நானும் அமைதி காத்தேன்.

ஆனால், திருவண்ணாமலையில் சமீபத்தில் ராமதாஸ் பேசும்போது, என்னை சேற்றில் கிடந்த பன்றி என்றுகூறியபோது ரசிகர்கள் கொந்தளித்துப் போயினர். அவரை எதிர்க்க வேண்டும் என்று தங்களது உணர்ச்சிகளைக்கொட்டினர். அவர்களது உணர்வுகளில் நியாயம் உள்ளதை நினைத்து, அவற்றை மதித்து, பாமக போட்டியிடும் 6தொகுதிகளில் மட்டும் எதிர்ப்பை காட்டுமாறு சொன்னேன்.

அதை ஏற்று ரசிகர்களும் அந்த 6 தொகுதிகளிலும் பணியாற்ற ஆரம்பித்தபோது, பாமகவினர் தங்களதுஅடியாட்கள் மூலம் ரசிகர்களை நேரிலும், தொலைபேசியிலும் கொலை செய்து விடுவதாக மிரட்டவும், தாக்கவும்ஆரம்பித்தனர்.

எனக்கு என் ரசிகர்களின் நலன் மிகவும் முக்கியம். ஒவ்வொரு ரசிகனுக்கும் போலீசார் பாதுகாப்புதந்து கொண்டிருக்க முடியாது. இதனால் தான் பா.ம.க. போட்டியிடும் 6 தொகுதிகளில் மட்டும் பாஜக,அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பணியாற்றுமாறு கூறினேன். இதனால் அந்தத் தொகுதிகளில் உள்ளரசிகர்களுக்கு அந்தக் கட்சிகளின் பாதுகாப்பு கிடைக்கும் என்பதால் அப்படிச் சொன்னேன்.

இந் நிலையில்தான் மதுரையில் கருப்புக் கொடி காட்ட முயன்ற ரசிகர்கள் மீதும், பத்திரிக்கையாளர்கள் மீதும்,அப்பாவி பொதுமக்கள் மீதும், பாமகவினர் ராட்சச தாக்குதலை தொடுத்தனர்.

கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட பாமகவினர் மீது கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்துள்ள காவல்துறையினருக்கும், தமிழக அரசுக்கும் எனது பாராட்டுக்கள். இந்த வழக்கிலிருந்து பா.ம.கவினரை நாம் விடப்போவதில்லை.

அரசியலில் எனக்குப் பிடிக்காதது இரண்டு. ஊழல் மற்றும் வன்முறை. வன்முறையின் ராஜாவாக விளங்குகிறார்டாக்டர் ராமதாஸ். எனது தனிப்பட்ட பாதிப்புகளுக்காக நான் ராமதாஸை எதிர்க்கவில்லை. தமிழக மக்களின்நலனுக்காகவும்தான் ராமதாஸை எதிர்க்கிறேன்.

இப்படிப்பட்ட ராமதாஸ்கள் (அரசியல்வாதிகள்) இருப்பதால்தான் நல்லவர்கள் கூட அரசியலுக்கு வரத்தயங்குகிறார்கள், அஞ்சுகிறார்கள். நான் ஆன்மீகவாதி, எனக்கு ஏன் இப்படி ஒரு பழிவாங்கும் உணர்ச்சி என்றுகேட்கிறர்கள். நான் ஆன்மீகவாதிதான். ஆனால் ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொரு கன்னத்தையும் காட்டும்அளவுக்கு நான் இன்னும் ஆன்மீகத்தில் உயரவில்லை.

ஒரு தவறும் செய்யாத என்னை அடித்தால் திருப்பி அடிப்பேன். அது தவறு என்றால் அந்தத் தவறைஆயிரம் முறை மீண்டும் மீண்டும் செய்வேன்.

ராமதாஸ், அவர்களே நாளை நீங்கள் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, இலங்கை, சிங்கப்பூர்,மலேசியா, கனடா, ஏன் ஜப்பானுக்குப் போனால் கூட என் ரசிகர்கள் உங்களுக்குக் கருப்புக் கொடிகாட்டுவார்கள். அவர்களை எல்லாம் அங்கும் ஆள் வைத்து அடிப்பீர்களா? உங்களால் அதுமுடியுமா?

ராமதாஸ் அவர்களே, வேண்டாம் இந்த வெறிச் செயல். இப்போது நீங்கள் எனது நண்பர்கள் வீட்டில் தஞ்சம்அடைந்து விட்டீர்கள். எனவே இதற்கு மேல் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. மனம் இடம் கொடுக்கவில்லை.

என் அன்பு ரசிகர்களே, போதும், ராமதாசுக்கு உங்கள் பலத்தைக் காட்டிவிட்டீர்கள். இனிமேல் யாரும்கருப்புக் கொடி காட்டுவது, ராமதாசின் கூட்டங்களில் போய் கூச்சல் போடுவது, ராமதாசுக்கு எதிராகபோஸ்டர் ஒட்டுவது போன்ற வேலைகள் எதையும் செய்ய வேண்டாம்.

நமது உணர்வுகளை, எதிர்ப்பின் நியாயத்தை தமிழக மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். இனி ஜனநாயகரீதியில்இனி ஓட்டைப் போட்டு நமது எதிர்ப்பைத் தெரிவிப்போம். நமது எதிர்ப்பையும் மீறி ராமதாஸ் ஜெயித்தால், அதுஅவரது பூர்வ ஜென்ம புண்ணியம். தோற்றால் அவரது பூர்வ ஜென்ம புண்ணியம் தீர்ந்து போச்சுன்னு அர்த்தம்என்றார் ரஜினி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+