காங்கிரஸ் கோஷ்டி பூசலில் தவிக்கும் எல். கணேசன்
திருச்சி:
திருச்சி மாவட்ட காங்கிரஸாரின் கோஷ்டிப் பூசலில் சிக்கிக் கொண்டு, திருச்சி மதிமுக வேட்பாளர் எல்.கணேசன்அவஸ்தைப்படுகிறார்.
பிற இடங்களைப் போலவே திருச்சியிலும் காங்கிரஸ் கட்சியினர் சில கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர்.மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெரோம் அடைக்கலராஜ் தலைமையில் ஒரு கோஷ்டியும், மேயர் சாருபாலாதொண்டமான், முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் ஆகியோரின் தலைமையில் ஒரு கோஷ்டியும் உள்ளன.
இந்த இரண்டு கோஷ்டியினரும் இழுக்கும் இழுப்புக்கு ஒத்துப் போக வேண்டிய கட்டாயத்தில் எல்.கணேசன்உள்ளார். கடந்த வாரம் ஜெரோம் அடைக்கலராஜ் தலைமையில் நடந்த தேர்தல் செயல்வீரர்கள் கூட்டத்தில்எல்.கணேசன் கலந்து கொண்டார்.
இந் நிலையில் சாருபாலா தொண்டமான் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும் கலந்து கொள்ள கணேசனுக்குஅழைப்பு வந்தது. எந்தக் கோஷ்டியையும் பகைத்துக் கொள்ள விரும்பாத கணேசன் இதிலும் கலந்து கொண்டார்.
ஏற்கனவே வயோதிகம் காரணமாக பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட முடியாமல் தவித்து வரும் கணேசனை,காங்கிரஸ் கோஷ்டியினர் வேறு அலைக்கழிப்பதால் திருச்சி மாவட்ட மதிமுகவினர் கவலையடைந்துள்ளனர்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications