சாதனைகளை மக்கள் மதிப்பதில்லை: பி.டி.ஆர்.
ஆண்டிப்பட்டி:
அரசியல் கட்சிகள் அமைக்கும் கூட்டணிக்குத்தான் மக்கள் ஓட்டுப் போடுகிறார்கள், சாதனைகளை அவர்கள்கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை என்று முன்னாள் திமுக சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் கூறியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரசியல் களம் கண்டுள்ள பி.டி.ஆர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில்,பெரியகுளம் காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம்.ஆரூணுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.
பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை ஆட்சிப் பொறுப்பில்திமுக இருந்தபோது அது நிகழ்த்திய சாதனைகள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. தமிழகம் முழுவதிலும் ஏராளமானநலத் திட்டங்களை திமுக அரசு மிகவும் வெற்றிகரமாக செய்திருந்தது.
மதுரை மாநகரில் மட்டும் ரூ. 500 கோடி அளவுக்கு பாதாள சாக்கடைத் திட்டம், வைகை ஆற்றைச் சுற்றிலும்சுற்றுச்சூழல் திட்டம் என பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
தேனி மாவட்டத்திலும் 18ம் கால்வாய் திட்டம், சோத்துப்பாறை திட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகவளாகம் என பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராமப்புறங்களில் சிமென்ட் சாலைகள் போடப்பட்டன, பஸ்வசதி மேம்படுத்தப்பட்டது, குடிநீர்ப் பிரச்சினைக்கும் முடிந்த வரை தீர்வு காணப்பட்டது.
இது தவிர உழவர் சந்தைகள், சமத்துவபுரம் ஆகியவை மக்கள் மனதை கவர்ந்த திட்டங்களாகும். ஆனால்சட்டசபைத் தேர்தலில் சரியான, பலமான கூட்டணியை அமைக்காத காரணத்தால் திமுக தோல்வியைத் தழுவியது.மக்கள் திமுக அரசின் சாதனைகளை பார்க்கவில்லை, அது அமைத்த கூட்டணியைத்தான் பார்த்தார்கள்.
ஆனால் இப்போது வலுவான கூட்டணியை திமுக அமைத்துள்ளது. அதன் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக்கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கேவெற்றி கிடைக்கும் என்றார் அவர்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications