ஜெயலலிதாவுக்கு ராமதாஸ் விடுக்கும் சவால்
மயிலாடுதுறை:
காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கண்டால்தான் ஒரே மேடையில் பேசுவேன் என்று பிரதமர் வாஜ்பாய்க்குநிபந்தனை விதிக்க முதல்வர் ஜெயலலிதா தயாராக இருக்கிறாரா என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சவால்விடுத்துள்ளார்.
மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வாஜ்பாயும், ஜெயலலிதாவும் ஒரே மேடையில் பேசப்போவதாக கூறுகிறார்கள். ஜெயலலிதா அவர்களுக்கு இந்த நேரத்தில் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.
காவிரி நீரை தமிழகத்திற்குக் கட்டாயம் கொண்டு வருவேன், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பேன் என்றுவாஜ்பாயிடமிருந்து உறுதி மொழி வாங்கித் தர முடியுமா உங்களால்?
காவிரி நீர் வந்தால்தான் உங்களுடன் ஒரே மேடையில் பேசுவேன் என்று வாஜ்பாயிடம் நிபந்தனை விதிக்கஜெயலலிதா தயாரா? காவிரிப் பிரச்சினை சிக்கலடைந்ததற்கு ஜெயலலிதாதான் முழுப் பொறுப்பும் ஏற்கவேண்டும்.
காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவு நமக்குக் கிடைத்து 13 ஆண்டுகளாகி விட்டது. இந்த 13ஆண்டுகளில் 8 ஆண்டுகாலம் ஜெயலலிதா ஆட்சி புரிந்துள்ளார். ஆனால் காவிரியிலிருந்து நீர் கொண்டுவருவதற்குரிய ஒரு நடவடிக்கையிலும் அவர் உருப்படியாக ஈடுபடவில்லை.
நரசிம்மராவ் ஆட்சிக்காலத்திலும், பின்னர் வாஜ்பாய் ஆட்சியிலும், ஜெயலலிதாவின் ஆதரவு மத்திய அரசுக்குமிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அதைப் பயன்படுத்தி, மத்திய அரசுகளுக்கு நெருக்கடி கொடுத்துகாவிரிப் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும் ஜெயலலிதா என்றார் ராமதாஸ்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications