ரஜினி முடிவு: கூட்டணி தலைவர்களுடன் கருணாநிதி ஆலோசனை
சென்னை:
பா.ஜ.கவுக்கு நேரடியாகவும் அதிமுகவுக்கு மறைமுகமாகவும் ரஜினிகாந்த் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளநிலையில், அதனால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து விவாதிக்க வரும் 16ம் தேதி ஜனநாயக முற்போக்குக்கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை திமுக தலைவர் கருணாநிதி கூட்டியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா அறிவாலய முரசொலி மாறன் கூட்டஅரங்கில் 16ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பாமக போட்டியிடும் தொகுதிகளில் பாஜகவை ஆதரிக்கப் போவதாக ரஜினி தெவித்துள்ளார். மேலும் மத்தியில்நதிகளை இணைக்கும் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தேசிய ஜனநாயக கூட்டணி கூறியுள்ளதால், அந்தக்கூட்டணிக்கே தனது ஓட்டு என்றும் ரஜினி கூறியுள்ளார்.
இதனால் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் பாஜக-அதிமுகவுக்கு ஆதரவாக வேலை பார்க்க ரஜினி ரசிகர்கள் முடிவுசெய்துள்ளனர்.
இதன் காரணமாக திமுக வட்டாரத்தில் கவலை தொற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளது. ரசிகர்களால் திமுககூட்டணிக்கு பெரிய அளவில் பாதிப்பு வராது என்று நினைக்கும் கருணாநிதி, அதே நேரத்தில் அதிமுகவுக்குநிச்சயமாக ஓரளவு ஆதாயம் கிடைக்கும் என்று கருதுகிறார்.
இந் நிலையில் ரஜினியுடன் நேரடியாகவே மோத ராமதாஸ் தயாராகியுள்ளார். அவரை கருணாநிதிசமாதானப்படுத்தி வருவதாகத் தெரிகிறது.
தேர்தல் முடியும் வரை ரஜினி குறித்து யாரும் கடுமையாகவோ அல்லது தேவையில்லாமலோ விமர்சனம் செய்வதைதவிர்க்குமாறு கூட்டணிக் கட்சியினருக்கு, குறிப்பாக பாமக தலைவர் ராமதாஸுக்கு, கருணாநிதி இக் கூட்டத்தில்வைத்தே அறிவுறுத்துவார் என்று தெரிகிறது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications