இலங்கை ராணுவத்திடம் அடைக்கலம் கோரும் கருணா
கொழும்பு:
விடுதலைப் புலிகளின் தாக்குதலையடுத்து மட்டக்களப்பில் இருந்து வெளியேறி வட-மேற்குகாட்டுப் பகுதியில் பதுங்கியுள்ள கருணா, தனக்கு அடைக்கலம் தருமாறு இலங்கை ராணுவத்துக்குக்கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், இதை ராணுவம் உறுதிப்படுத்த மறுத்துவிட்டது. அதே நேரத்தில் கருணா கோரிக்கைவைத்தால் கிழக்குப் பகுதியில் இருந்து தப்பிச் செல்ல (safe passage) மனிதாபிமானரீதியில்அவருக்கு உதவி செய்வோம் என இலங்கை அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.இதற்கிடையே மட்டக்களப்போடு, அம்பாறை மாவட்டமும் கருணாவின் படைகளிடம் இருந்துபுலிகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன.
இப்போது சிறிய அளவிலான தனது ஆதரவாளர்கள், பாதுகாவலர்களுடன் கருணா காட்டுப்பகுதியில் தப்பியோடிக் கொண்டிருக்கிறார். அவரைப் பிடிக்கும் முயற்சியில் புலிகளின் படைஈடுபட்டுள்ளது.
முன்னதாக கருணாவை ஹெலிகாப்டர் மூலம் இலங்கை ராணுவம் காப்பாற்றி அழைத்துச்சென்றுவிட்டதாக செய்திகள் வந்தன. இதனை ராணுவத்துறைச் செயலாளர் சிரில் ஹெராத்முழுமையாக மறுத்தார். அதே நேரத்தில், கருணா கோரிக்கை வைத்தால் மனிதாபிமானஅடிப்படையில் அவர் தப்பிச் செல்ல உதவுவோம் என்றார்.
இந் நிலையில் பொலநறுவ மாவட்டத்தில் உள்ள மின்னேரியா ராணுவ முகாமைத் தொடர்புகொண்ட கருணா தனக்கு அடைக்கலம் கோரியுள்ளதாக சில அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள்தெரிவிக்கின்றன.
தப்பியோடும் முன்பாக கருணாவின் படையினர் தங்கள் வசம் இருந்த கன ரக துப்பாக்கிகள்,ஆர்ட்டிலரி துப்பாக்கிகள், மார்ட்டர் லாஞ்சர்கள் ஆகியவற்றை நொறுக்கிப் போட்டுவிட்டுச்சென்றுள்ளனர். இந்த ஆயுதங்கள் புலிகளுக்கு உதவக் கூடாது என்ற எண்ணத்தில் கருணா இந்தஉத்தரவை இட்டதாகத் தெரிகிறது.
மீனகம் முகாமை கருணாவின் படைகள் விட்டுச் சென்றதையடுத்து அங்கிருந்த ஜெனரேட்டர்கள்,மின் சாதனப் பொருட்களை பொது மக்கள் புகுந்து அள்ளிச் சென்ற சம்பவமும் நடந்துள்ளது. இந்நிலையில் கருணா தரப்பில் மிக பலத்த உயிர்ச் சேதமும் ஏற்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள்கூறுகின்றன.
இந் நிலையில் கருணாவின் படையில் இருந்த 100 சிறார்களை புலிகள் இயக்கம் இன்று விடுவிக்கஇருப்பதாக யூனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications