மருமகன் கொலை: அதிமுக பெண் எம்எல்ஏ மீது கர்நாடக போலீஸ் வழக்கு
கோவை:
மருமகன் கொலை வழக்கில் காங்கேயம் அதிமுக எம்எல்ஏ மீது கர்நாடக போலீஸார் கொலை வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
காங்கேயம் தொகுதி அதிமுக பெண் எம்எல்ஏ செல்வி முருகேசன். இவரது மகள் கவிதாவை இவரிடம்உதவியாளராக இருந்த சிவகுமார் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கு எம்எல்ஏ வீட்டில் கடும்எதிர்ப்பு இருந்தது.
இதையடுத்து தம்பதிகளுக்கு தொடர்ந்து மிரட்டல் வந்தது. பயந்து போன இருவரும் பெங்களூருக்குச் சென்றுவிட்டனர். அங்கு ஒரு விடுதியில் தங்கி இருந்தனர். இந் நிலையில் சிவக்குமார் கடத்திச் செல்லப்பட்டு படுகொலைசெய்யப்பட்டார்.
சிவக்குமார் படுகொலை தொடர்பாக செல்வி முருகேசன் மீது கர்நாடக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துஉள்ளனர். கொலை செய்தது கூலிப்படையாக இருக்கலாம் என்ற சந்தேகத்திலிருக்கும் போலீஸார் தீவிர தேடுதல்வேட்டையில் இறங்கியுள்ளனர்.
வழக்கு தொடர்பாக கர்நாடக போலீசார் தாராபுரம் வந்து சிவக்குமாரின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர்.
சிவக்குமாரின் தாயார் புஷ்பா கூறியதாவது:
எனது மகன் எம்எல்ஏ மகளை காதலிக்கும் போதே எங்கள் வீட்டுக்கு கொலை மிரட்டல்கள் வரும். அவர்கள்திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வாழந்தபோதும் மிரட்டல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதனால்பெங்களூர் சென்றனர். அப்படியிருந்தும் கொன்று விட்டார்கள் என்று கூறினார்.
இது குறித்து செல்வி முருகேசனிடம் நிருபர்கள் கேட்டபோது,
இந்தக் கொலை விஷயத்தை பத்திரிக்கையைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். இதற்கு மேல் என்னிடம்எதுவும் கேட்காதீர்கள் என்றார்.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக











Click it and Unblock the Notifications