யாராலும் எங்களை தோற்கடிக்க முடியாது: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அடுத்த 3 மாதங்களில் தமிழக சட்டசபைக்குத் தேர்தல் வரும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

தென் சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலுவை ஆதரித்து திருவான்மியூரில் நடந்தபொதுக் கூட்டத்தில் அவர் பேசினார். ரஜினிகாந்த்தின் மனம் திறப்புக்குப் பின் ராமதாஸ் மேற்கொண்ட முதல்பிரசாரம் இது.

கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுவையில் உள்ள ஒருதொகுதியிலுமாக மொத்தம் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிவேட்பாளர்கள் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள்.

பாமக மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்பதை இந்த நேரத்தில் உறுதியாக சொல்லிக் கொள்ளவிரும்புகிறேன். பாமக வேட்பாளர்களை யாராலும் தோற்கடிக்க முடியாது.அது யாராக இருந்தாலும், எந்த முயற்சிஎடுத்தாலும் சரி எங்களுக்குக் கவலை இல்லை. பாமக அனைத்துத் தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவதுஉறுதி.

மக்கள் பிரச்சனைகளுக்கு பத்திரிக்கைகள் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். ஆனால் ஒரு தனிப்பட்ட நபரின்(ரஜினி) பிரச்சினைகளுக்காக அவர் பின்னால் ஓடோடிச் செல்வது சரியான செயலாக எனக்குப் படவில்லை.

காவிரியில் தண்ணீர் பெறுவதற்கு முதல்வர் ஜெயலலிதா சிறிய அளவில் கூட முயற்சி செய்யவில்லை. ஆனால்அதற்காக முயற்சித்த எதிர்க்கட்சித் தலைவர்களைக் கிண்டல் செய்தார்.

வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வருவது சாத்தியமில்லை என முன்னாள் முதல்வர்அண்ணாவே விவசாயிகள் மாநாட்டில் பேசியுள்ளார். பின்னர் வந்த அரசுகளும் அத்திட்டம் பயன்தராது என்பதால்அதைக் கைவிட்டுவிட்டனர்.

இப்போது வீராணம் மூலம் சென்னைக்கு தண்ணீர் வரும் என்று ஜெயலலிதா கூறுகிறார். வீராணம் அருகேஆழ்துளைக் கிணறுகள் அமைத்து நீர் கொண்டு வந்தாலும் சென்னைக்கு ஒரு டி.எம்.சி. கூட கிடைக்காது.

3 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் உடனடியாக அமல்செய்யப்பட்டிருந்தால் அப் பணிகள் இப்போது முடிந்திருக்கும். ஆனால், ரஷிய நிறுவனத்திடம் லஞ்சம் கேட்டவழக்கு காரணமாக இத்திட்டம் துவக்கப்படாமலேயே உள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், பாபர் மசூதி இடிக்கப்பட்டஇடத்தில் கட்டுவதைத் தான் தவறு என்கிறோம். மத்திய அரசு பொது சிவில் சட்டம் உருவாக்க முனைவதுஆபத்தானது.

அடுத்த 3 மாதங்களில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வரும். அனைத்துத் தரப்பினரையும் பாதிப்புக்குஉள்ளாக்கியுள்ளதால் அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி ஜெயலலிதா அரசை கலைக்குமாறுகேட்பேன்.

இதை திமுக தலைவர் கருணாநிதி ஏற்கவிட்டாலும் கடைசி முறையாக இதைப் பயன்படுத்திவிட்டு, சட்டத்தை ரத்துசெய்யலாம் என அவரிடம் கோருவேன்.

ஜனநாயக முற்போக்குக் கூட்டணியினர் யாரும் பிரசாரக் கூட்டங்களில் பட்டாசு வெடிக்க வேண்டாம். இதனால்காற்று மாசுபடுகிறது. இப் பணத்தைப் பிரசாரச் செலவுக்குப் பயன்படுத்தலாம் என்றார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+