பெரியகுளம்: கையிடம் திணறும் தினகரன்
பெரியகுளம்:
பெரியகுளம் தொகுதியில் படுத்துக்கிட்டே ஜெயிப்பாரு என்று எதிர்பார்க்கப்பட்ட தினகரன், அங்கு பெரும்சவாலை சந்தித்து வருகிறார். அவர் தோல்வியடைய வாய்ப்பிருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.
இந்தத் தொகுதியில் சேடப்பட்டி, தேனி, கம்பம், போடிநாயக்கனூர், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகியசட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது முக்குலத்தோர் தான்.
தினகரனும் இதே சமூகத்தைச் சேர்ந்தவர் தான் என்றாலும் சொந்த ஜாதியிலேயே அவருக்குக் கடும் எதிர்ப்புகிளம்பியுள்ளது. இதனால் கையை பிசைந்து கொண்டிருக்கிறார் சசிகலாவின் அக்காள் மகனான தினகரன்.
இரண்டு முறை எம்.பியாக இருந்த தினகரனே மீண்டும் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அவர்எப்படியும் ஜெயிக்கப் போறார் என்ற மூடில் தான் திமுக கூட்டணியே இருந்தது. தினகரனின் பணபலம், சாதிஓட்டுக்களை மனதில் வைத்து, இது நமக்குத் தேறாத தொகுதி என நினைத்து அதை காங்கிரசின் தலையில்கட்டிவிட்டது திமுக.
முக்குலத்தோர் என்றழைக்கப்படும் தேவர் சமூகத்தின் கள்ளர் பிரிவைச் சேர்ந்தவர் தினகரன். மறவர் மற்றும்அகமுடையர் ஆகிய மற்ற இரு பிரிவினரையும் தினகரனும் அவரது ஆட்களும் மதிக்காமல் இருந்து வந்தனர்.கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் எல்லாம் கள்ளர் பிரிவினரையே நியமித்த தினகரன் மற்ற இரு பிரிவினரையும்ஒதுக்கியே வைத்திருந்தார்.
பொறுமை காத்த இவர்கள் இப்போது சமயம் பார்த்து போர்க்கொடி தூக்கி பதிலடிக்குத் தயாராகி வருகின்றனர்.
பல மறவர் கிராமங்களுக்குள் தினகரன் நுழைய முடியாத சூழல் நிலவுகிறது. மேலும், அகமுடையர் பிரிவுத்தலைவர்கள் தங்கள் சமூகத்தினரின் கூட்டங்களைக் கூட்டி தினகரனுக்கு வாக்களிக்கக் கூடாது என்றுஉத்தரவிட்டுள்ளனர்.
மறவர்கள் அதிகம் வசிக்கும் கருப்பையாபுரம், தங்கம்மாள்புரம், வாய்க்கால்பாறை, கோயில்பாறை ஆகியஊர்களில் தினகரனுக்கு ஓட்டு போடக் கூடாது எனறு ஊர்க் கூட்டங்கள் நடத்தப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் தினகரனுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் கடினம் என மாநில உளவுத் துறையே முதல்வர் ஜெயலலிதாவிடம்அறிக்கை தந்துள்ளது.
சேடப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலும் தினகரனின் செல்வாக்கு சரிந்தே உள்ளது. இத் தொகுதியில் செல்வாக்குமிக்க முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவை அதிமுக மேலிடம் ஓரங்கட்டி வைத்துள்ளது. இதனால்அவரது ஆதரவாளர்கள் முடங்கிப் போயிருக்கிறார்கள்.
மேலும் அதிமுக எம்எல்ஏக்கள் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியும் தினகரனுக்கு எதிராக பூதமாகக்கிளம்பியுள்ளது.
தினகரனுக்கு எதிரான எல்லா பதங்களையும் தனக்கு சாதகமாகத் திருப்பி வருகிறார் காங்கிரஸ் சார்பில்கிளமிறக்கப்பட்டுள்ள ஹாரூண். பெரும் செல்வந்தரான ஹாரூண், 400க்கும் மேற்பட்ட கார்களை தொகுதிக்குள்சுற்ற விட்டிருக்கிறார்.
தினகரன் மீது எரிச்சலில் இருக்கும் முக்குலத்தோர் சமூகத்தினரை நேரில் சந்திக்கும் ஹாரூண் அவர்களில்முக்கியமானவர்கள் கையில் கார் சாவியைக் கொடுத்து பிரச்சாரத்துக்குத் தேவையான மேற்படி விஷயங்களையும்கொடுத்து உற்சாகப்படுத்தி அனுப்புகிறார்.
இதனால் ஊர் ஊராக சுற்றும் இந்தப் படை தினகரனுக்கு எதிராக தீவிர ஓட்டு வேட்டையாடுகிறது.
இது தவிர, தொகுதியில் குறிப்பிடத்தகும் எண்ணிக்கையில் இருக்கும் முஸ்லீம்கள் ஓட்டுக்கள் சுளையாகஹாரூணுக்கே வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முஸ்லீமாக இருந்தாலும் கோவில்களிலும் போய் ஆசி வாங்குகிறார். கோவில் அறங்காவலர்களையும் சந்திக்கும்ஹாரூண், அப் பகுதியின் மூத்த முக்குலத்தோர் சமூகத் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
மேலும் தினகரனுக்கு இணையாக ஹாரூணும் பணத்தை பெட்டி, பெட்டியாக கொண்டு வந்து இறக்குவதால்,இதுவரை பண பலத்தை வைத்து ஜெயிக்கலாம் என்ற தினகரனின் நம்பிக்கையில் மண் விழுந்துள்ளது.
தினகரனின் பண பலம் குறித்துக் கேட்டால், இறைவன் எனக்கும் கொடுத்திருக்கிறான் என்று அதிரடி பதில்தருகிறார் ஹாரூண். யாராவது ஆரத்தி எடுத்தால் தட்டில் தினகரன் 100 ரூபாய் போட்டால், பின்னாடியே வரும்ஹாரூண் பாய் 200 ரூபாய் போடுகிறார்.
தினகரன் எங்கெங்கு போகிறாரோ அந்த இடங்களுக்கு எல்லாம் தொடர்ந்து போவது ஹாரூணின் ஸ்டைலாகஉள்ளது. பல இடங்களில் தினகரனின் வாகன வரிசை ஒரு தெருவைத் தாண்டுவதற்குள் ஹாரூணின் கார் உள்ளேநுழைகிறது.
தினகரன் ஆட்களின் செருப்பு வீச்சு, கல்வீச்சு, போலீஸை வைத்து மிரட்டல், கேஸ் போடுவது போன்ற அரட்டல்உருட்டல்களை எல்லாம் தன் பக்கம் உள்ள மறவர், அகமுடையார் சமூக இளைஞர்களை வைத்து லாவகமாகசமாளித்து வருகிறார் ஹாரூண்.
இந் நிலையில் தான் உளவுத் துறையும் தினகரனுக்கு தோல்வி முகம்தான் என்று அறிக்கை தந்துள்ளது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications