பொது மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட அமைச்சர்
சென்னிமலை:
சென்னிமலை அருகே அதிமுக வெற்றிக்காக அமைச்சர் தாமோதரன் தனது உறவினர்களுடன் யாகம் செய்யவந்தபோது, உறவினர்களுக்கும் அப் பகுதி பொது மக்களுக்கும் இடையே மோதல் உருவானது. இதையடுத்துமக்களிடம் அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
சென்னிமலை அருகே உள்ள மாடுகட்டிபாளையத்தில் ராணி ரங்கநாயகி கோயில் உள்ளது. இக்கோயிலில்அமைச்சர் தாமோதரன் வழிபடுவது வழக்கம். மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் வெற்றிக்காக யாகம்நடத்த தாமோதரன் தனது நெருங்கிய உறவினர்களுடன் வந்தார்.
யாகம் நடந்து கொண்டிருந்த நிலையில் தாமோதரனின் உறவினர்கள் சிலர், அவர்கள் வந்த காரை பின்னால் எடுக்கமுயன்றனர். ரிவர்ஸில் வந்த கார் அங்கு பைக்கில் நின்று இளைஞர்கள் மீது மோதியது. இதனால் இருதரப்புக்கும்இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றி அந்த வாலிபர்களை அமைச்சரின் உறவினர்கள் தாக்கினர். இதையடுத்து அப் பகுதி மக்கள்திரண்டு வந்து அமைச்சரின் உறவினர்களைச் சுற்றி வளைத்தனர். சிலருக்கு தர்ம அடியும் விழுந்தது. இதனால்அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. போலீஸை கூப்பிடுவோம் என உறவினர்கள் மிரட்ட, வரச் சொல்லுங்கள் எனபொது மக்கள் குரலை உயர்த்தியதோடு சாலை மறியலுக்கும் தயாராயினர்.
தேர்தல் நேரத்தில் அடிதடி, போலீஸ், பொது மக்களுக்கு பிரச்சனை என்றால் வம்பாகி விடுமே என பயந்தஅமைச்சர் மக்களிடம் சமாதானம் பேசினார். மேலும் தாக்கப்பட்ட வாலிபர்களிடம் தனது உறவினர்கள் சார்பில்பகிரங்க மன்னிப்பு கோரினார். அதன் பின்னரே அமைச்சரின் உறவினர்கள் ஊரை விட்டுச் செல்ல பொது மக்கள்அனுமதித்தனர்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்!










Click it and Unblock the Notifications