ஊறுகா வித்தாலும்.. பிரச்சனையை ஊற போட மாட்டேன்
நெல்லை:
காங்கிரஸ் வேட்பாளரைப் போல நான் எதற்கெடுத்தாலும் டெல்லிக்கு காவடி எடுக்க மாட்டேன்.. நானே சிந்திப்பேன்.. நானேமுடிவு செய்வேன்... இதனால் எனக்கே ஓட்டு போடுங்கள் என்று பிரச்சாரம் செய்து காங்கிரஸ்காரர்களை வெறுப்பேற்றிவருகிறார் திருநெல்வேலியில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் ராஜகோபால்.
ஊறுகாய் வியாபாரியான இவர், இதற்கு முன் பழனி, மயிலாப்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு டெபாசிட் தொகையைநாட்டுக்கு அர்ப்பணித்தவர்.
ஏன் இந்த முறையும் போட்டி என்று கேட்டபோது சுவாரசியமான பதிலைத் தருகிறார்.
நான் விற்பது ஊறுகாயாக இருந்தாலும் மக்கள் பிரச்சனைகளை ஊறப் போட மாட்டேன். காங்கிரஸ்காரர்களைப் பாருங்கள்,நைட்டு தோசைக்கு என்ன சட்னி அரைக்கிறதுன்னு, டெல்லிக்கு எஸ்.டி.டி பண்ணி பெர்மிஷன் கேட்பாங்க.
சுவாசிக்கிறத தவிர, சுயமா வேறு எந்த வேலையும் செய்ய மாட்டாங்கள். சுயமா யோசிச்சு எந்த முடிவும் எடுக்க மாட்டாங்க.மக்கள் பிரச்சனைகளையும் அப்படித்தான் ஊற வச்சு புளிக்க வப்பாங்க.
நான் அப்படி இல்ல. எதற்கெடுத்தாலும் கட்சி மேலிடத்தை நான் அணுக மாட்டேன் (கட்சி இருந்தா தானே அணுகுறது!).டெல்லிக்குப் பறக்க வேண்டியதில்லை. நானே தலைவன், நானே தொண்டன். என்ன முடிவாக இருந்தாலும் நானே எடுக்கமுடியும். அதனால மக்கள் எனக்கு ஓட்டு போடனும் என்கிறார்.
காங்கிரஸ்னா ரொம்பத்தான் இளப்பமாக போச்சு!!
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications