விமான விபத்தில் நடிகை செளந்தர்யா சாவு
பெங்களூர்:
பா.ஜ.கவுக்காக தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற நடிகை செளந்தர்யா விமான விபத்தில் பலியானார். உடன் சென்றஅவரது சகோதரர் அமர்நாத் உள்பட மேலும் இருவரும் பலியாயினர்.
கர்நாடகத்தைச் சேர்ந்த செளந்தர்யாவுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் பெங்களூர் சாப்ட்வேர் என்ஜினியர் ஸ்ரீதர்என்பவருடன் திருமணம் நடந்தது.
32 வயதான செளந்தர்யா தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார்.திருமணத்துக்குப் பிறகும் மதுமதி உள்ளிட்ட தமிழ், கன்னடப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு ஆதரவாக நடிகை, நடிகையர்கள் களமிறங்கியுள்ளநிலையில் செளந்தர்யாவும் சமீபத்தில் பா.ஜ.கவில் இணைந்தார். அக் கட்சிக்காக கர்நாடகத்தில் தீவிரப் பிரச்சாரம்செய்து வந்தார். நேற்று பெங்களூர் மல்லேஸ்வரம் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.
இந் நிலையில் ஆந்திர மாநிலம் கரீம்நகரில் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரக் கூட்டத்தில் பேசுவதற்காகஇன்று காலை 11.05 மணிக்கு பெங்களூரில் இருந்து 4 பேர் அமர்ந்து செல்லக்கூடிய செஸ்னா- 180 ரக சிறியவிமானத்தில் கிளம்பினார். உடன் அவரது சகோதரர் அமர்நாத் மற்றும் பா.ஜ.க. நிர்வாகி ஒருவரும் சென்றனர்.
| அக்னி ஏவியேசன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தை பா.ஜ.க. வாடகைக்கு எடுத்திருந்தது.
காலை பெங்களூர் புறநகரில் உள்ள ஜக்கூர் ராணுவ விமான தளத்தில் இருந்து அந்த விமானம் ஆந்திராவுக்குப்புறப்பட்டது. புறப்பட்ட சில நொடிகளில் அதில் தீப் பிடித்துக் கொண்டது. |
நான்கு பேரின் உடல்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்து, சிதைந்து போய்விட்டதாக கர்நாடககாவல்துறை டிஜிபி மடியாள் தெரிவித்துள்ளர்.
| உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வண்டிகள் 30 நிமிடங்கள் போராடித் தான் தீயை அணைக்க முடிந்தது.
விபத்தில் விமானமும் சுக்குநூறாகி, முழுவதுமாக எரிந்து போனது. தரையில் மோதிய வேகத்தின் அதன் கதவு 15அடி தூரத்தில் பிய்ந்து போய் விழுந்தது. |
| மொத்தம் நான்கு மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் தயாரித்த துவீபா என்ற கன்னடபடம் கடந்த ஆண்டு தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. |
|
இன்றைய விபத்து குறித்து அறிந்தவுடன் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அனந்த்குமார்ஆகியோர் பிரச்சாரப் பணிகளை நிறுத்திவிட்டு சம்பவம் நடந்த விமான தளத்துக்கு விரைந்து வந்துபார்வையிட்டனர்.
செளந்தர்யாவின் மறைவுக்கு பிரதமர் வாஜ்பாய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே விபத்து குறித்து விமானத்துறை இயக்குனரகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த விமானம்பாண்டிச்சேரியைச் சேர்ந்த நெக்சஸ் கம்ப்யூட்டர் நிறுவனத்திடம் இருந்து அக்னி ஏவியேசன் நிறுவனத்தால்வாங்கப்பட்டு வாடகைக்கு இயக்கப்பட்டு வந்தது.
-
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!















Click it and Unblock the Notifications