ரஜினியின் அறிவிப்பு பாதிப்பை ஏற்படுத்தாது: எஸ்.ஆர்.பி
சென்னை:
நடிகர் ரஜினி யாருக்கும் ஓட்டுப் போடச் சொல்லி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. தனது கருத்தை மட்டுமே வெளிப்படுத்திஉள்ளார். எனவே அவரது அறிவிப்பினால் எந்தவித அரசியல் பாதிப்பும் ஏற்படாது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்தகாங்கிரஸ் தலைவருமான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறினார்.
கடந்த 1996ம் ஆண்டு ப.சிதம்பரத்துடன் சேர்ந்து, ரஜினியை திமுக, தமாகா கூட்டணிக்கு ஆதரவாக திருப்பியதில் முக்கியப் பங்குவகித்தவர் எஸ்.ஆர்.பி எனப்படும் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம். ரஜினியுடன் நேரடித் தொடர்பு வைத்துள்ள தலைவர்களில்இவரும் ஒருவர்.
பாமகவுக்கு எதிராக ரஜினி மேற்கொண்டுள்ள நிலைப்பாடு குறித்தும், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ரஜினி தெவித்துள்ளகருத்து குறித்தும் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறுகையில்,
ரஜினி தனது சொந்தக் கருத்தைத் தெவித்துள்ளார், அவ்வளவுதான். யாருக்கும் ஓட்டுப் போடும்படி அவர் சொல்லவில்லை.எனவே ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
ரஜினிகாந்த்தின் அறிக்கையில் ரசிகர்களுக்கு மறைமுகமாக செய்தி உள்ளது என்பதை மறுக்க முடியாது. அவரது கருத்துப்படிஅவர்கள் செயல்படுவார்கள். ஆனால் கடந்த 1996ம் ஆண்டைப் போல ரஜினி கேட்டுக் கொண்டபடி மக்கள் ஒட்டுமொத்தமாகஒரு அணிக்கு ஓட்டுப் போட மாட்டார்கள்.
ரஜினி நல்ல மனிதர், ஆன்மீகவாதி, அமைதி விரும்பி. அவருக்கு அரசியலில் ஈடுபடும் ஆர்வம் கிடையாது. அதனால்தான் இந்தமுறை கூட அவர் நேரடியாக அரசியலில் குதிக்கவில்லை.
1996ம் ஆண்டு திமுக-தமாகா கூட்டணியை ஆதரித்தார். 1998ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் எங்கள் கூட்டணியைஆதரித்தார். ஆனால், அதன் பின்னர் தன்னைத் தனிமையில் விட்டுவிடுமாறும், எதற்கும் கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும்கேட்டுக் கொண்டார்.
அதனால்தான் கடந்த 2 தேர்தல்களின்போதும் நாங்கள் ரஜினியை அணுகவில்லை என்றார் எஸ்.ஆர்.பி.
மூப்பனாருக்கு மிக நெருங்கியவராக விளங்கிய எஸ்.ஆர்.பி. இப்போது வாசனின் நிழலாக மாறியுள்ளார். நாடாளுமன்றத்தேர்தலில் தனது ஆதரவாளர்கள் பலருக்கும் சீட் வாங்கிக் கொடுத்த வாசனால், எஸ்.ஆர்.பிக்கு நீலகிரி தொகுதியை வாங்கித் தரமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் பிரச்சாரத்தில் சுணக்கமாகவே இருந்து வருகிறார் எஸ்.ஆர்.பி.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications