நிருபர்களுக்கு நூதன முறையில் லஞ்சம் கொடுத்த டாக்டர்
சென்னை:
ஆதி ஆந்திர தெலுங்கு அருந்ததியர் சம்மேளனத்தின் காப்பாளராக உள்ள டாக்டர் சி.எம்.கே.ரெட்டி என்பவர்தனது அமைப்பு குறித்து செய்தி வெளியிட நிருபர்களுக்கு நூதன முறையில் லஞ்சம் வழங்கியுள்ளார்.
ஆதி ஆந்திர தெலுங்கு சம்மேளனம் என்ற பெயரில் ஒரு அமைப்பு சென்னையில் உள்ளது. இந்த அமைப்புஅதிமுகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளது. தங்களது அமைப்பின் ஆதரவை செய்தியாளர்களுக்குத் தெரிவிப்பதற்காகமத்திய சென்னை அதிமுக தேர்தல் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு இந்த அமைப்பு ஏற்பாடுசெய்திருந்தது.
கூட்டத்திற்கு டாக்டர் சி.எம்.கே.ரெட்டி ஏற்பாடு செய்திருந்தார். பத்திரிக்கையாளர் கூட்டம் முடிந்த பிறகு வந்திருந்தநிருபர்களிடம் ஒரு கவர் தரப்பட்டது. அந்த கவருக்குள் ரூ. 100 இருந்தது. மேலும் ஒரு தாளும் இருந்தது.
அந்தத் தாளில், அன்பு நண்பரே, இந்த நூறு ரூபாயை தங்களது போக்குவரத்து செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள். எங்களது செய்தியை தங்களது நாளிதழில் வெளியிட்ட பிறகு, இந்தத் தாள் மற்றும் செய்திவெளியான தங்களது இதழின் பிரதி ஆகியவற்றுடன் டாக்டர் சி.எம்.கே.ரெட்டி, 815, பூந்தமல்லி நெடுஞ்சாலை,கீழ்ப்பாக்கம் என்ற முகவரியை அணுகி ரூ. 400ஐ பெற்றுக் கொள்ளலாம் என்று எழுதப்பட்டிருந்தது.
இதைப் பார்த்த நிருபர்கள் அதிர்ச்சியடைந்தனர். சம்பந்தப்பட்ட டாக்டர் சி.எம்.கே.ரெட்டி, தமிழக மருத்துவக்கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இது குறித்து தமிழக மருத்துவக் கவுன்சில் தலைவர் டாக்டர்கே.ஆர்.பாலசுப்ரமணியத்திடம் கேட்டபோது,
டாக்டர் ரெட்டி கவுன்சிலின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர். எனவே உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கமுடியாது. கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் இது குறித்து விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்தப் புகாரை டாக்டர் ரெட்டி மறுக்கவில்லை என்பதுதான் விசேஷம். அவர் கூறுகையில், நிான் பணம் கொடுத்ததுஉண்மைதான். ஆனால் எனது செய்தி செய்தித்தாள்களில் வெளியாக இதைத் தவிர வேறு வழி எனக்குத்தெயவில்லை. எனது அனுபவம் கற்றுக் கொடுத்த பாடம் இது.
சில செய்தியாளர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு செய்தியை வெளியிடாமல் டபாய்த்து விடுகின்றனர்.அதனால்தான், வெறும் நூறு ரூபாய் மட்டுமே தலில் கொடுத்து விட்டு செய்தி வெளியான பிறகு மீதம் 400 ரூபாயைபெற்றுக் கொள்ளுமாறு கூறியிருந்தேன் என்றார் ரெட்டி.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications