விபத்து குறித்து தீவிர விசாரணையில் விமானத்துறை இயக்குனரகம்
பெங்களூர்:
நடிகை செளந்தர்யா பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானது குறித்து பயணிகள் விமான போக்குவரத்துத்துறை இயக்குநரகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
ஆந்திராவில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக செளந்தர்யா பயணம் செய்த செஸ்னா 180 ரகவிமானம் வானில் கிளம்பிய வேகத்தில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் செளந்தர்யா உட்பட 4 பேர்பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்து குறித்து பயணிகள் விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறது. இயக்குநரகத்தின் உயரதிகாரிகளில் ஒருவரான செல்வம் இது குறித்து செய்தியாளர்களிடம்,
விமானம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் விமான நிறுவனமான அக்னி ஏவியேஷனிடம் இருந்துவிசாரணைக் குழு கைப்பற்றியுள்ளது. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என்று கூறினார்.
பரமேஷ்வரன் என்ற மற்றொரு அதிகாரி, விபத்துக்குள்ளான விமானம் 1955ல் தயாரிக்கப்பட்டதாகும். கடந்தஜனவரி மாதம் பல பரிசோதனைகளுக்குப் பின்பு, விமானத்தைப் பயன்படுத்தலாம் என்று அனுமதி தரப்பட்டதுஎன்றார்.
மேலும் சில அதிகாரிகள், அக்னி ஏவியேஷன் நிறுவனம் பயணிகள் போக்குவரத்துக்கான முறையான அனுமதியைபோக்குவரத்துத் துறை இயக்குநரகத்திடம் இருந்து பெற்றுள்ளதா என்று தெரியவில்லை. விபத்துக்குள்ளானவிமானத்துக்கு முறையான காப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை என்று கூறினார்கள்.
பாண்டிச்சேரியில் உள்ள நெக்ஸஸ் கம்ப்யூட்டர்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து அக்னி ஏவியேஷன் நிறுவனம்இந்த விமானத்தை கடந்த வருடம் வாங்கியது. இந்த விமானம் மொத்தம் 7,000 மணி நேரங்கள் பறந்துள்ளது.இதில் அக்னி ஏவியேஷன் நிறுவனம் 110 மணி நேரங்கள் இயக்கியுள்ளது.
விபத்தில் பலியான விமானி ஜாய் பிலிப் (28) 400 மணி நேரங்கள் விமானத்தை இயக்கிய அனுபவம் உடையவர்என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications